Sunday, April 1, 2012

மின்சார சபையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் பாதிப்புறும் மக்கள்


வலிகாமம் பகுதியில் உள்ள சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பளை, அளவெட்டி, மருதனார்மடம், உடுவில் பகுதிகளில் அடிக்கடி நிகழும் மின் அதிகரிப்பினால் தொடர்ச்சியாக மின்சார உபகணங்கள் எரிவதுடன் பழுதடைந்தும் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் பெருமளவான இலத்திரனியல் மின் உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மின்சார சபையிடம் முறையிட்டும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மருதனார்மடம் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் இரண்டு பம்பிகள் எரிந்துள்ளதுடன் அயலில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்த மின் உபகரணங்களும் பழுதடைந்துள்ளன.
இதேபோன்று, கடந்த வாரம், தெல்லிப்பளை, அளவெட்டி, மல்லாகம் பகுதிகளிலும் இத்தகைய சம்பவம் இடம்பெற்றதுடன் பல லட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
இது தொடர்பில், மின்சார சபையின் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மக்களுக்கு அந்த அதிகாரிகள் பொறுப்பற்ற பதில்களையே வழங்கியுள்ளனர்.
அண்மையில் காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீதி அகலிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்கம்பங்களை இருந்த இடத்தில் இருந்து மாற்றி புதிய இடங்களில் பொருத்தத் தொடர்ந்ததைத் தொடர்ந்தே இந்த அவலம் பொது மக்களுக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக மின்சாரக் கம்பிகள் உரிய முறையில் இனைக்கப்படாமையாலும் கம்பிகள் இறுக்கமான நிலையில் பூட்டப்படாமையாலும் ஒரு கம்பியுடன் மற்றைய கம்பி படுவதினாலும் மற்றும் உரிய முறையில் மின் கம்பிகள் உரிய மின்மர்றறிகளுக்கு பொருத்தப்படாமையாலும் மின்சாரம் கூடிக்குறையும் நிலைமை ஏற்பட்டு பொது மக்களினதும் வியாபாரிகளினதும் இலத்திரனியல் உடைகள் பாதிக்கப்படும் நிலமை காணப்படுகின்றமையும் சுட்டிக் காட்டக் கூடியதாகும்.


0 comments:

Post a Comment