Saturday, July 21, 2012

நகங்கள் அழகாக,நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் ...



முகத்திற்கு ஏற்ப நகங்களை வளர்க்க பெரும்பாலான பெண்கள் ஆசைப்படுவார்கள்.ஆனால் முகத்திற்கு தரும் பராமரிப்பை நகங்களுக்கு தருவதில்லை.நகங்கள் அழகாக,நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் 
தரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகியுங்கள்.அப்போது தான் நகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந்தெடுங்கள்.சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால்,நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும்.அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால்,நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால் எளிதாக வெட்ட முடியும். அதே போல்,தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.



சில பெண்கள் ஆசை ஆசையாக வளர்க்கும் நகங்கள் உடைந்து விடுகின்றது.நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள்,சிறிதளவு பேபி ஓயிலில்(Baby Oil) நகங்களை மூழ்கும் படி வைத்தால்,நகங்கள் உறுதியாகும்.நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.ஆகவே,அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.

தண்ணீரை மிதமாக சூடாக்கி,சிறிது உப்பு கலந்து,அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால்,விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
தினமும் நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும்.எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெயில் பாலீஷ் உபயோகிக்காமல் இருப்பது நல்லது.

ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால்,நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது.எனவே,நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் நகங்கள் பளபளப்பாக இருக்கும்.அதேபோல்,பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும்.மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.


மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால் நகங்களில் காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.
நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம்.எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
நெயில் பாலீஷ் போடும் போது,பிரஷ்ஷினால் நகத்தின் அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட வேண்டும்.அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும்.

குழந்தைகளுக்கான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்(Desktop Computer) அறிமுகம்!

சிறிய குழந்தைகள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்(Desktop Computer) அறிமுகமாகி உள்ளது. முற்றிலும் வண்ணமயமாக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும் பிளே ஸ்டேசன்(Play Station) போல் இது அமைந்துள்ளது. இந்த டெஸ்க்டாப் கம்யூட்டருக்கு பிரிமியர் கிட்ஸ் சைபர்நெட் ஸ்டேசன் என்று பெயர் வைத்துள்ளனர். தண்ணீர் கீபோர்டில் பட்டால் கூட எந்த பழுதும் ஏற்படாது என்பதில் இருந்து மொனிடரை தொட்டு இன்புட் கொடுக்கலாம் என்பதுவரை அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் உள்ளது.

இண்டெர்நெட்டில் ஆபாச இணையதளங்களை தடுக்கும் மென்பொருளும் எந்த வைரஸும் கம்யூட்டரை தாக்காத வண்ணம் உள்ள மென்பொருள்களையும் வடிவமைத்துள்ளனர். இதனுடன் குழந்தைகள் அறிவை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான பேக்கேஸும் சேர்த்தே கொடுக்கின்றனர்.



இதில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த டொட்லர் என்று முதல் பேக்கேஸ். 


இரண்டாவது 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த கைண்டர்கெர்டன் என்ற பேக்கேஸ். 


மூன்றாவதாக 11 முதல் 15 வயது வரை உள்ள தொடக்க மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான பேக்கேஸும் உள்ளது. 
இத்தனை வசதிகளும் உள்ள இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் விலை கொஞ்சம் அதிகம் தான் இதன் விலை 1999 அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கறுப்பா இருக்கீங்களா? கவலைபடாதீங்க…

இந்த உலகில் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகஅழகு நிலையங்களுக்கு சென்று அழகுப்படுத்திக் கொள்கின்றனர். அதில் பெரும்பாலும் அழகு நிலையங்களுக்குச் சென்று அழகுப்படுத்துவதில் முதல் காரணமாக இருப்பது, கறுப்பாக இருக்கிறோம் என்பதற்காகவே. இவ்வாறு கறுப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது. அவ்வாறு அதிக நிறமிசெல்கள் உடலில் இருந்தால் அந்த இடமானது  கறுப்பாக  இருக்கும். சிலர் திடீரென்று  கறுப்பாக  மாறுவார்கள், அதற்கு அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரக்கும். அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத்தன்மையை குறைவு படுத்த பல கெமிக்கல் கலந்த அழகு சாதனப் பொருட்கள் இருந்தாலும், வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால், சருமமானது அழகோடு இருப்பதுடன், மெலனின் அளவையும் கட்டுப்படுத்தலாம் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


1. வெண்ணெய் பழத்தில் இருக்கும் ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின் ஈ, நிறமி செல்லான மெலனின் அளவை கட்டுப்படுத்தும்.அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்பழ (Avocado) பேஸ்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பாலை ஊற்றி நன்கு கலந்து, முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். இவ்வாறு ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முகத்தில் அளவுக்கதிகமாக  இருக்கும் மெலனின் அளவு குறையும். முகமும் அழகாக, பொலிவோடு இருக்கும்.


2. பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். ஆகவே 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும். 


3. பால் 2-3 டேபிள் ஸ்பூன்  மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும். இது மிகவும் சிறந்த இயற்கையான வழியும் கூட...


4. சந்தன பவுடர் நல்லதொரு சரும பராமரிப்பிற்கு ஏற்ற சிறந்த  பொருள். அதனை தண்ணீரில் குழைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், அத்துடன் பால் மற்றும் சிறிதளவு தேனை கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊறச் செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.


5. கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள். அது விரைவில் மெலனின் அளவை சரிசெய்யும். மேலும் எந்த இடம் அதிகமான அளவு கறுப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன் இரத்த ஓட்டத்தின் அளவும்  அதிகரிக்கும். மேலும் இது செல்கள் பாதிப்படையாமல் காத்துக் கொள்ளும். இந்த முறை உடலுக்கு விரைவில் நல்ல நிறத்தைக் கொடுக்கும். மேற்கூறியவாறெல்லாம் செய்தால் உடலில் அதிகமாக இருக்கும் மெலனின் அளவு குறைவதோடு, முகமும் அழகாக புதுப்பொலிவோடு காணப்படும்.

மூன்று மார்புகளுடன் கலக்கும் காத்லீன் லீப்! (படங்கள் இணைப்பு )




ஹாலிவுட்டில் ஒரு படத்திற்காக ஒரு நடிகை மூன்று மார்புகளுடன் காட்சி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த நடிகையின் பெயர் காத்லீன் லீப்.
சாண்டியாகோவில் நடந்த காமிகான் நிகழ்ச்சியின்போது மூன்று மார்புகள் தெரிய அவர் வந்தபோது அனைவரும் வியந்து போய் அங்கேயே பார்த்தனர்.
லென் வைஸ்மேனின் டோட்டல் ரீகால் படத்தின் ரீமேக்கில்தான் இப்படி மூன்று மார்புகளுடன் தோன்றுகிறார் காத்லீன்.
மூன்று மார்புகளும் வெளியில் தெரியும்படியாக அவர் கவர்ச்சிகரமான உடையுடன் வந்தபோது நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அத்தனை பேரின் பார்வையும் மூன்று மார்புகள் மீதுதான் விழுந்தது.
இந்த மார்பு நிஜமான மார்பு அல்ல, மாறாக செயற்கையாக உருவாக்கப்பட் மார்பு, டோட்டல் ரீகால் படத்தில் இப்படி மூன்று மார்புகளுடன் அவர் தோன்றுகிறார். பட புரமோஷனுக்காக செயற்கை மார்பகத்தைப் பொருத்தியபடி அவர் வந்திரு்நதார்.
நிஜமான மார்பு போலவே காத்லீனின் மூன்றாவது மார்பும் கம்பீரமாக காட்சி அளித்ததைப் பார்த்து பலரும் வியந்தனர்.
காத்லீன் டோட்டல் ரீகால் படத்தில் மூன்று மார்புகளுடன் நடிப்பது ஏற்கனவே ரசிகர்களிடையே கிளுகிளுப்பை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில் நிஜமாகவே அதே கெட்டப்பில் அவரை நேரில் பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகி விட்டது.
தன்னையே உற்றுப் பார்த்தவர்களைப் பார்த்து சிரித்தபடி காத்லீன் இப்படிச் சொன்னார்…உங்களுக்கு மூன்று கைகள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் இல்லையா….!





பழைய புடவைகளை புதிதாக மாற்றி பயன்படுத்த ஐடியா!!!

அழகான பழைய துப்பட்டாக்களில் மூன்று இருந்தால், அழகான புடவை ஒன்றை புதிதாக உருவாக்கிவிடலாம். மூன்று தாவணிகள் இருந்தாலும் அதை புதிய புடவையாக டிசைன் செய்துவிடலாம். பழைய ஒன்றிரண்டு புடவைகளின் அழகான டிசைன்களை இணைத்துகூட, புதிய டிசைன் புடவை உருவாக்கலாம். அதனால் பணச்செலவு மிச்சமாகும்.
புதிய டிசைன் புடவைகளும் கிடைக்கும். இரண்டு `ஸ்டைல்’களை கலந்தும் புதிய ஸ்டைல் உருவாக்கலாம். அப்படி உருவானது `காக்ரா சாரி`. இதன் முன்பகுதி காக்ரா மாதிரி இருக்கும். பின் பகுதி புடவைபோல் தோன்றும். `தாவணி ஸ்டைல்’ புடவையில் ஒரு புடவை இரு கலராகத் தெரியும். தூரத்தில் இருந்து பார்த்தால் பாவாடை- தாவணி அணிந்திருப்பதுபோல் தோன்றும்.
பெரும்பாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்), கிளாமரஸ் பிரிவு (பளிச்சென்ற ஜிகினா ஸ்டைல் உடைகளில் ஆர்வம் கொள்பவர்களுக்கான வகை), டிரமாட்டிக் ஸ்டைல் (இந்த வகை உடைகளில் ஒரு நாடகம் அரங்கேறியதுபோல் காட்சிகள் இருக்கும். இந்த வகை உடைகள் எல்லோரது பார்வையையும் சுண்டி இழுக்கும்), கிரியேட்டிவ் ஸ்டைல் (இவர்கள் தங்கள் கற்பனைக்கு தக்கபடி புதிதாக ஆடைகளை வடிவமைத்து கேட்பவர்கள்).
ஒரு பெண் இந்த 6 வகை உடைகளில் எதில் கவனம் செலுத்துகிறாரோ அதை வைத்து அவர் டேஸ்ட், குணங்களை கணித்துவிடலாம். தமிழ் நாட்டில் கிளாசிக்கல் அண்ட் டிரடீஷனல் உடைகளை தேர்ந்தெடுப்பவர்களே அதிகம். அடுத்த இடத்தில் எலிகண்ட் ஸ்டைல் இருக்கிறது என்று வகை வகையாய் உடைகளை வைத்தே பெண்களின் குணங்களை கணித்து சொல்கிறார்கள்..

தென் ஆப்ரிக்காவுக்கெதிரான டெஸ்ட்டில் சதம் கடந்தார் அலியஸ்டர் குக்...




தென் ஆப்ரிக்காவுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரு ஸ்ட்ராஸ் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அலியஸ்டர் குக் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 115 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய ஜொனதன் ட்ராட் 71 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய கெவின் பீட்டர்சன் 42 ஓட்டங்களும், இயன் பெல் 13 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்பு களமிறங்கிய பிரெஸ்னன் 8 ஓட்டங்களும், ஸ்டுவர்ட் பிராட் 16 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணி இரண்டாம் நாளான இன்று 8 விக்கெட் இழப்பிற்கு 377 ஓட்டங்கள் எடுத்து துடுப்பெடுத்தாடி வருகிறது. மேட் பிரியர் 58 ஓட்டங்களும், கிரேம் ஸ்வான் 11 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.