Saturday, July 21, 2012

குழந்தைகளுக்கான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்(Desktop Computer) அறிமுகம்!

சிறிய குழந்தைகள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்(Desktop Computer) அறிமுகமாகி உள்ளது. முற்றிலும் வண்ணமயமாக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும் பிளே ஸ்டேசன்(Play Station) போல் இது அமைந்துள்ளது. இந்த டெஸ்க்டாப் கம்யூட்டருக்கு பிரிமியர் கிட்ஸ் சைபர்நெட் ஸ்டேசன் என்று பெயர் வைத்துள்ளனர். தண்ணீர் கீபோர்டில் பட்டால் கூட எந்த பழுதும் ஏற்படாது என்பதில் இருந்து மொனிடரை தொட்டு இன்புட் கொடுக்கலாம் என்பதுவரை அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாகத் தான் உள்ளது.

இண்டெர்நெட்டில் ஆபாச இணையதளங்களை தடுக்கும் மென்பொருளும் எந்த வைரஸும் கம்யூட்டரை தாக்காத வண்ணம் உள்ள மென்பொருள்களையும் வடிவமைத்துள்ளனர். இதனுடன் குழந்தைகள் அறிவை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான பேக்கேஸும் சேர்த்தே கொடுக்கின்றனர்.



இதில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த டொட்லர் என்று முதல் பேக்கேஸ். 


இரண்டாவது 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த கைண்டர்கெர்டன் என்ற பேக்கேஸ். 


மூன்றாவதாக 11 முதல் 15 வயது வரை உள்ள தொடக்க மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான பேக்கேஸும் உள்ளது. 
இத்தனை வசதிகளும் உள்ள இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் விலை கொஞ்சம் அதிகம் தான் இதன் விலை 1999 அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment