Thursday, June 28, 2012

ராதாவின் இளைய மகள் மணிரத்தினத்தின் 'கடல்' படத்தின் நாயகி !

பழைய நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவரது இரண்டாவது மகளான துளசியும் சினிமாவுக்கு வருகிறார்.
மணிரத்னம் இயக்கும் 'கடல்' படத்தில் துளசி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதில் நாயகனாக நடிகர் கார்த்திக் மகன் கவுதம் அறிமுகமாகிறார். ஏற்கனவே இப்படத்தில் சமந்தாவை நாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் கவுதமை விட மூத்தவராக இருந்ததால் ஜோடி பொருத்தம் இல்லை என்று அவரை மாற்றி விட்டு துளசியை தேர்வு செய்துள்ளனர்.
தனது தங்கை நடிகையானது குறித்து கார்த்திகா கூறியதாவது:-
துளசி பத்தாவது வகுப்பு படிக்கிறார். மணிரத்னம், ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் 'கடல்' படத்தில் நடிக்கிறார். இதுபோன்ற வாய்ப்பை யாரும் நழுவ விட மாட்டார்கள். துளசி தற்போது சென்னையில் இருக்கிறார்.
மணிரத்னமும் சுகாசினியும் தங்கள் குழந்தைபோல் பாவித்து துளசிக்கு நடிப்பு பயிற்சி அளிக்கின்றனர். நடிப்பு மட்டுமின்றி நடனம், வசன உச்சரிப்பு போன்றவற்றிலும் பயிற்சி பெறுகிறார். என் தாய் ராதா நடிகையாக இருந்தபோதும் அவர் எனக்கு நடிப்பு கற்றுக் கொடுக்கவில்லை. எனது பாணியில் இயற்கையாக நடிக்கவேண்டும் என்று கருதினார். அதுபோல்தான் துளசி விஷயத்திலும் எங்கள் தலையீடு இல்லை.



Enhanced by Zemanta

0 comments:

Post a Comment