Thursday, June 28, 2012

மேம்பாலத்தில் இருந்து தலைகுப்புறக் கவிழ்ந்த பேருந்து - சென்னையை கலங்க வைத்த விபத்து !

Posted Imageசென்னை நகரில் அரசு பயணிகள் பேருந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 40-ம் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சென்னையின் மையப்பகுதியான பாரிமுனையிலிருந்து வடபழனி நோக்கி 17-பி நம்பர் நகரப்பேருந்து சென்று கொண்டிருந்தது.

இன்று மதியம் 2 மணியளவில் சென்னை அண்ணாமேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது அப்போது பாலத்தில் இருந்து இறங்கி வளைந்து அருகில் இருக்கும் சர்வீஸ் ரோட்டில் செல்ல முயன்ற போது நிலை தடுமாறி கவிழ்ந்து கீழே சாலையில் விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்திலிருந்த கீழே விழுந்ததில் அதில் பயணித்தவர்கள் அலறினர்.

Posted Image

Enhanced by Zemanta

0 comments:

Post a Comment