Saturday, October 1, 2011

viyapu.com...

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து டிவிலியர்ஸ் விலகல்

தென் ஆப்பிரிக்காவின் ஒருநாள் அணியின் கேப்டன் டிவிலியர்ஸ் கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் கேப்டனான பிறகு அவர் விளையாடும் முதல் தொடர் இதுவாக இருந்தது.

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டி வில்லியர்ஸ் துடுப்பாட்டம் மற்றும் விக்கெட் கீப்பரான சாம்பின்ஸ் லீக் போட்டியில் விளையாடி வந்தார். அவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை.

அவரது கையில் ஏற்பட்ட காயம் குணமடைய 6 வார காலத்திற்கு மேலாகும் என்பதால் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 20 ஓவர் போட்டி மற்றும் ஒரு நாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

IPhone போனுடன் போட்டிபோடும் Google – ஒரு மொபைல் இணைய யுத்தம்

கூகிள் இணைய உலாவி, சாம்சங் தொலைபேசியுடன் இணைந்து சான்டியாகோவில் ஒக்ரோபர் 11 இல் சாம்சங் Nexus Prime இனை வெளியிடுகின்றது.
இப்புதிய கைத்தொலைபேசியில் இறுதியாக வந்த Ice Cream Sandwich என்ற பட்டப்பெயர் கொண்ட அன்றொயிட் மாதிரி நிறுவப்பட்டுள்ளது.
கூகிளும் சாம்சங்கும் அன்றொயிட்டின் புதிய விடயங்களை ஒன்றுசேர்ந்து வெளியிடப்போவதாகத் தெரிவித்துள்ளன. கூகிள் ஒரு செயற்பாட்டுத் தொகுதியை (Operating System) கையடக்கக் கணினிகளிலும் கைத்தொலைபேசிகளிலும் ஒரே தடவையில் வெளியிடுவது இதுதான் முதல் தடவையெனக் கூறப்படுகின்றது.


அத்துடன் கலிபோர்ணியாவில் வைத்து அப்பிள் தனது iPhone ஐ வெளியிட்ட ஒரு வாரத்தில் இது வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் இரட்டை புரொசசர்கள், 4.5 அங்குலத் திரை என்பன காணப்படுமென்றும் 4Gb கொள்ளளவினைக் கொண்டிருக்குமென்றும் வதந்திகள் உலவுகின்றன. அத்துடன் இதில் புதிய கையடக்கக் கணினி அல்லது தற்போதுள்ள சாம்சங் கையடக்கக் கணினிகளுக்கான மென்பொருள் update வெளியிடப்படுமெனக் கூறப்படுகின்றது.

கணணி துறையினருக்கான கூகுளின் புதிய வசதி

இன்றைய கால கட்டத்தில் இணையம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இணையம் இருப்பதால் எந்த ஒரு வேலையையும் எளிதாக செய்ய முடிகிறது.

கணிப்பொறி துறையில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் Programmers. இவர்கள் தான் மென்பொருட்கள், இணையதள வடிவமைப்பு இப்படி பல செயல்களுக்கு கோடிங் எழுதி உருவாக்குபவர்கள்.

ஆனால் இந்த கால கட்டத்தில் யாரும் முழு கோடிங்கையும் சொந்தமாக எழுதுவது இல்லை. அப்படி எழுதினாலும் வெகு நேரம் எடுக்கும் போன்ற சில காரணங்களால் இணையத்தில் இருந்து தான் கோடிங்கை எடுக்கின்றனர். அதில் அவர்களுக்கு தேவையான சில மாற்றங்கள் செய்து கோடிங்கை வடிவமைத்து கொள்கின்றனர்.

இது போன்ற Programmers மற்றும் மென்பொருள் துறை மாணவர்களுக்கு என்று கூகுள் வழங்கும் வசதி தான் இந்த Google Code Search . இந்த தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான கோடிங்கை தேடி கொள்ளலாம்.

இந்த தளத்திற்கு சென்று தேவையான விவரங்களை கொடுத்து சரியான கோடிங்கை சுலபமாக தேடி பயன்படுத்தி கொள்ளுங்கள் மற்றும் உங்களுக்கு சிறிய வகை கோடிங் தேவைப்பட்டால் searchco இந்த தளத்தில் சென்று தேவையான குறிச்சொல்லை கொடுத்தால் அடுத்த வினாடி அதற்க்கான கோடிங் உங்களுக்கு வந்து விடும்.

உதாரணமாக javaScript Key code என கொடுத்தால் அடுத்த நொடி அதற்கான பட்டியல் உங்கள் கண்முன்னே இருக்கும். இந்த இரண்டு தளங்களின் உதவியுடன் நீங்கள் உங்களுக்கு தேவையான கோடிங்கை சுலபமாக கண்டறிந்து கொள்ளலாம்.

யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். குறிகட்டுவான் பிரதேசத்தில் மாணவன் பஸ்ஸில் ஏறும்போது தவறி வீழ்ந்து பலியான சம்பவத்தில் யாழ். இந்துக் கல்லூரி நிர்வாகத்தினரின்
கவனயீனமான செயற்பாடே காரணம் என தெரிவித்து கல்லூரி மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீதிகளில் சைக்கிள் ரயர்களைப் போட்டு எரித்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். 44 பேர் பயணிக்க கூடிய பஸ்சில் 90ற்கும் அதிகமான மாணவர்களை ஏற அனுமதித்தமை, ஒழுங்கற்ற நிர்வாக முறை காரணமாகவும், அந்த மாணவர்களோடு பொறுப்பு வாய்ந்த ஆசிரியர்கள் கூட செல்லவில்லை எனவும் குற்றம் சுமத்தினர். மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா தலைமையிலான பொலிஸார் வருகை தந்து மாணவர்களோடு கதைத்து கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டார். இருந்தும் மாணவர்கள் கல்லூரி மைதானத்தில் இருந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக யாழ். இந்துக் கல்லூரி அதிபர் க.கணேசராஜாவிடம் கேட்டபோது: 'வருடாவருடம் திருத்தலங்களுக்கு மாணவர்கள் சுற்றுலா செல்வது வழக்கம். 85 மாணவர்கள் பயணிக்க கூடிய பஸ் ஒன்றில்தான் மாணவர்கள் சென்றனர். பெற்றோர்களின் அனுமதியுடன் இந்த மாணவர்கள் பொறுப்பு வாய்ந்த ஆசிரியர்களினால் அழைத்துச் செல்லப்பட்டனர். குறித்த மாணவர் உயிரிழந்த சம்பவம் ஒரு தற்செயலாக நடந்த விபத்து' என அவர் தெரிவித்தார். உயிரிழந்த மாணவனின் இறுதிக் கிரியைகளுக்காக உடனடியாக ஒரு லட்சம் ரூபா பணம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இன்று காலை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அனாமதேய துண்டுப் பிரசுரம் ஒன்றும் பிரசுரிக்கப்பட்டது. குறித்த துண்டுப்பிரசுரத்திலே யாழ். இந்துக் கல்லூரி அதிபரின் பல அத்துமீறிய செயல்களை சுட்டிக்காட்டி, ஊழல் நிறைந்த அதிபர் பதவி விலகும்வரை தமது சாத்வீக போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
viyapu.com...