தென் ஆப்பிரிக்காவின் ஒருநாள் அணியின் கேப்டன் டிவிலியர்ஸ் கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவரால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஒருநாள் கிரிக்கெட் கேப்டனான பிறகு அவர் விளையாடும் முதல் தொடர் இதுவாக இருந்தது.
தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டி வில்லியர்ஸ் துடுப்பாட்டம் மற்றும் விக்கெட் கீப்பரான சாம்பின்ஸ் லீக் போட்டியில் விளையாடி வந்தார். அவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை.
அவரது கையில் ஏற்பட்ட காயம் குணமடைய 6 வார காலத்திற்கு மேலாகும் என்பதால் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 20 ஓவர் போட்டி மற்றும் ஒரு நாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.











0 comments:
Post a Comment