கூகிள் இணைய உலாவி, சாம்சங் தொலைபேசியுடன் இணைந்து சான்டியாகோவில் ஒக்ரோபர் 11 இல் சாம்சங் Nexus Prime இனை வெளியிடுகின்றது.கூகிளும் சாம்சங்கும் அன்றொயிட்டின் புதிய விடயங்களை ஒன்றுசேர்ந்து வெளியிடப்போவதாகத் தெரிவித்துள்ளன. கூகிள் ஒரு செயற்பாட்டுத் தொகுதியை (Operating System) கையடக்கக் கணினிகளிலும் கைத்தொலைபேசிகளிலும் ஒரே தடவையில் வெளியிடுவது இதுதான் முதல் தடவையெனக் கூறப்படுகின்றது.
அத்துடன் கலிபோர்ணியாவில் வைத்து அப்பிள் தனது iPhone ஐ வெளியிட்ட ஒரு வாரத்தில் இது வெளியிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதில் இரட்டை புரொசசர்கள், 4.5 அங்குலத் திரை என்பன காணப்படுமென்றும் 4Gb கொள்ளளவினைக் கொண்டிருக்குமென்றும் வதந்திகள் உலவுகின்றன. அத்துடன் இதில் புதிய கையடக்கக் கணினி அல்லது தற்போதுள்ள சாம்சங் கையடக்கக் கணினிகளுக்கான மென்பொருள் update வெளியிடப்படுமெனக் கூறப்படுகின்றது.











0 comments:
Post a Comment