Saturday, March 10, 2012

இந்தியா செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிப்பு...

இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர்
இந்திய இங்கிலாந்து
கிரிக்கெட் அணியினர்
(பழைய படம்)
இந்தியாவில் நான்கு வாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இங்கிலாந்து அணி ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், ஒரு இருபது-20 போட்டியிலும் விளையாடவுள்ளனர்.

இந்தியா செல்லும் அணியில் அலிஸ்ட்டர் குக், ஜோனதன் பாரிஸ்டோவ், இயன் பெல், ரவி போப்பாரா, ஸ்காட் போர்த்விக், டிம் பிரெஸ்னன், ஜேட் டெம்பாக், ஸ்டீவன் ஃபின், கிரெய்க் கீஸ்வெட்டார், ஸ்டுவர்ட் மீக்கார். சமித் பட்டேல், கெவின் பீட்டர்ஸன், க்ராம் ஸ்வான், ஜோனதன் ட்ராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஒலிம்பிக் தடகளப் பாதைகள் தயார்...


முக்கிய விளையாட்டரங்கம்அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தடகளப் பாதைகள் அமைக்கும் பணி முடிந்து விட்டதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.சுமார் 80,000 பேர் அமர்ந்து போட்டிகளை பார்க்கக் கூடிய வசதிகளைகொண்ட முக்கிய விளையாட்டு அரங்கிலேயே தடகளப் போட்டிகள்நடைபெறவுள்ளன. அந்த அரங்கில்தான் தடகளப் பாதைகள் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது.








முக்கிய விளையாட்டு அரங்கம்
இத்தாலிய நிறுவனமான மோண்டோ இந்த தடகளப் பாதையை அமைத்துள்ளது. செயற்கை ரப்பரால் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையானது, தடகள வீரர்கள் வேகமாக ஓட வழி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.கடந்த 2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இதே போன்று அமைக்கப்பட்ட ஓடு பாதையில் ஐந்து உலக சாதனைகளை படைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.அதே போன்று லண்டன் போட்டிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய தடகளப் பாதையிலும் குறைந்தது ஐந்து புதிய சாதனைகள் படைக்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள். அரங்கப் பணிகள் தொடருகின்றன.தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ள இந்த முக்கிய விளையாட்டு அரங்கில்தான் லண்டன் ஒலிம்பிக் போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் இடம்பெறும். மேலும் உடல் நலக்குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறணாளிகள் பங்கு பெறும் போட்டிகளும் இந்த அரங்கிலேயே நடைபெறவுள்ளது. அரங்கத்தில் உள்ள தடகள பாதையை அமைக்கும் பணி முடிவடைந்து விட்டதாக லண்டன் ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறினாலும், முழு அரங்கத்தை நிர்மாணிக்கும் பணிகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன.இந்த அரங்கத்தை கட்டி முடிக்கப்படும் போது, அதன் கட்டுமானத் தொகை 486 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய உங்கள் புத்தக வெளியீடு ரத்து...

பாகிஸ்தான் கிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷொயிப் அக்தர் எழுதிய ‘சர்ச்சைக்குய உங்கள்…’என்ற சுயசரிதை புத்தக வெளியீட்டுவிழா திடீரென ரத்து செய்யப்பட்டது.மும்பையில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த இப்புத்தக வெளியீட்டு விழா எந்தவித காரணமும் கூறப்படாது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் ஷொயிப் அக்தர் எழுதியுள்ள இப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய முறையில் இந்திய கிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கர், டிராவிட் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதினால் அதற்கு பலதரப்பட்டோரிடமிருந்து எதிர்ப்புக்கள் எழுந்துள்ள நிலையிலேயே இவ்வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.


ஒரு தொகை வெள்ளைப்பூண்டுகளை 10 செக்கன்களுக்குள் உரிக்கும் வித்தை

வெள்ளை பூண்டுகளை வேகமாக உரிக்கின்ற வித்தை உங்களுக்கு தெரியுமா?ஒரு சமையலுக்கு தேவையான வெள்ளை பூண்டுகளை வெறும் 10 செக்கன்களுக்குள் உரித்து விடலாம்.தெரியாவிட்டால்
 இவ்வீடியோவைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் அதிசயம் : உயிருள்ள பாலங்கள் (படங்கள், வீடியோ இணைப்பு)


இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள சோரா என்கிற ஊரில் ஒரு வகை மரங்களின் உயிருள்ள வேர்களில் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இங்கு பழங்குடி மக்கள் இவ்வித்தையை அறிந்து வைத்திருக்கின்றனர். இப்பாலங்கள் மிகவும் பலமானவை. ஆனால் பாலங்கள் முழுமை பெறுகின்றமைக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை பொதுவாக எடுக்கின்றது. பல நூற்றாண்டு காலத்துக்கும் நீடிக்கக் கூடியவை.

 




அழகான உதடுகளுக்கு இயற்கைமுறை

முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது.அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன.
உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்...
பொதுவான ஆலோசனைகள் :தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால்அவை ரோஜா போல மென்மையாக மாறும்.உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்குஉண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம்.அதனால் உதடுகள் வறண்டு போகவும்,நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும்.எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப்பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம்.அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப்பார்த்து உபயோகிக்க வேண்டும்.லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும்.இல்லாவிட்டால் மறுபடிஅதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள்பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விடவேண்டியது மிக முக்கியம்.லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது.அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது.எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில்தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம்பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும்சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம்தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவிவந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால்அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வாஷ் அல்லது தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம். லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும்.உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும்.அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.

உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் :
முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக்போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.லிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ்உபயோகிக்கலாம்.அதே மாதிரி பல வண்ண நிறங்களில்இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக்கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்படவேண்டிய விஷயம்.லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ்தடவப்பட வேண்டும்.லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும்லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.