Tuesday, May 1, 2012

வெளிநாடுகளின் அழுத்தங்கள், சூழ்ச்சிகளுக்கு இடமளியோம்!- மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த...

மனித உரிமைகள் என்ற பெயரில் எமது உரிமைகளை , தேசத்தின் உரிமையை உழைக்கும் மக்களின் உரிமைகளை பறித்துவிடப் பார்க்கின்றனர். இந்த நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாக்க இவர்கள் செயற்படவில்லை. இவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். இன்னும் நாம் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருப்பதாக நினைத்துக் கொண்டு ஏகாதிபத்தியத்தின் மூலம் எம்மை அடிபணியச் செய்யப் பார்க்கிறார்கள். அதுதான் அழுத்தங்களை வழங்குகின்றனர்.
அவர்கள் யாழ்ப்பாணம் செல்வதையிட்டு நாம் சந்தோசப்படுகிறோம். ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பிரதமராக இருந்த போது போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்தி யாழ்ப்பாணம், கிளிநொச்சி செல்ல கிடைக்கவில்லை. அவர் அநுராதபுரம் கூட அப்போது போகவில்லை. எமது மக்களும் படையினரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றியமையினால் தான் அவர்களால் யாழ்ப்பாணம் சென்று மே தினம் கொண்டாட முடிந்துள்ளது.





மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள்! அவுஸ்திரேலிய அமைச்சர் இலங்கைக்கு விஜயம்...


2009ம் ஆண்டு, போர் ஓய்வுக்கு பிந்திய இலங்கைத்தீவில், சிறிலங்கா இராணுவத்தினரது மனித உரிமை மீறல்கள், தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின், ஆசிய பிராந்திய உபதலைவர் Elaine Pearson அவர்கள் ,சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பபடும் அகதிகள் மீது, சிறிலங்காவில் அச்சுறுத்தல்களும், மனித உரிமை மீறல்களும் உள்ளதென தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்ட அகதிகள் பலர் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும், பல்வேறு வகையிலும் அச்சுறுத்தப்பட்டும் உள்ளனர் என தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இவ்விவகாரம் தொடர்பில், சிறிலங்காவின் கள நிலைவரங்களை நேரில் கணடறிய வேண்டுமென, சிறிலங்காவுக்கு செல்லும் அவுஸ்திரேலியாவின் குடியேற்ற விவகாரங்களுக்கான அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பவர் ஸ்டார் மீது பண மோசடி புகார்...



தமிழ் நாட்டின் சென்னை சைதாப்பேட்டை புஜங்கராவ் தெருவை சேர்ந்தவர் கணேசன்.
இவர், பொலிஸ் கமிஷனர் திரிபாதியிடம் அளித்த புகாரில் லத்திகா உள்ளிட்ட ஒரு சில படங்களை தயாரித்து, நடித்திருப்பவர் டாக்டர் சீனிவாசன்.
இவர், நண்பர் ஒருவர் மூலம் எனக்கு அறிமுகமானார். எனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தொழில் நடத்த ரூ.2 கோடி கடன் வாங்கித் தருவதாக சீனிவாசன் என்னிடம் கூறினார்.
அதற்காக முதல் கட்டமாக ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்றார். அதை நம்பி அண்ணாநகரில் உள்ள அவரது பாபா டிரேடிங் என்ற நிறுவனத்தின் பெயரில் டி.டி.எடுத்து கொடுத்தேன்.
ஆனால், சொன்னபடி ரூ.2 கோடி கடன் வாங்கித் தரவில்லை. நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, அதையும் தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Xperia Sola கைப்பேசிகளை வெளியிடுகி​ன்றது சோனி....




சோனி நிறுவனம் தனது புதிய அறிமுகமான Xperia Sola கைப்பேசிகளை முதன் முதலில் கொங்கொங்கில் அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது.








சென்னை அணிக்கு முதன் முறையாக சவால் ஏற்பட்டுள்ளது: ஃபிளமிங்....


ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீவன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார்.


ஆபாச படத்திற்குள் ஐரோப்பாவை தாக்குவதற்கான சதித் திட்டம்: அல்கொய்தாவின் புதிய யுக்தி....

அல்கொய்தா இயக்கதினர், தங்களது தாக்குதல் திட்டத்தை ஆபாச படம் ஒன்றிற்குள் மறைத்து வைத்து அனுப்பியது தற்போது தெரியவந்துள்ளது.


இந்தியாவின் மும்பை மாநகரில் கடந்த 2008ஆம் ஆண்டு நடத்திய தீவிரவாதத் தாக்குதலைப் போன்று, ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்ற அல்கொய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது.


இதற்கான திட்ட விவரங்களை ஒரு ஆபாசப் படத்தில் சேர்த்து, அதை மெமரி டிஸ்க்கில் வைத்து அனுப்பியுள்ளனர். இது ஜேர்மன், ஆங்கிலம், அரபி ஆகிய மொழிகளில் பிடிஎப் போர்மட்டில் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மெமரி டிஸ்க்கைப் போட்டுப் பார்த்த போது அது ஒரு ஆபாசப் படம் என்று தெரியவந்தது. அதேபோல மற்றொரு பெயரிலும் ஒரு ஆபாசப் படம் இருந்தது. ஆனால் அந்த மெமரி டிஸ்க்கை ஆராய்ந்த போது தான் அதில் ஐரோப்பிய நாடுகளில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த விவரங்கள் ஒளிந்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து அதிர்ந்தனர்.