Tuesday, May 1, 2012

மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள்! அவுஸ்திரேலிய அமைச்சர் இலங்கைக்கு விஜயம்...


2009ம் ஆண்டு, போர் ஓய்வுக்கு பிந்திய இலங்கைத்தீவில், சிறிலங்கா இராணுவத்தினரது மனித உரிமை மீறல்கள், தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின், ஆசிய பிராந்திய உபதலைவர் Elaine Pearson அவர்கள் ,சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பபடும் அகதிகள் மீது, சிறிலங்காவில் அச்சுறுத்தல்களும், மனித உரிமை மீறல்களும் உள்ளதென தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்ட அகதிகள் பலர் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும், பல்வேறு வகையிலும் அச்சுறுத்தப்பட்டும் உள்ளனர் என தெரிவித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இவ்விவகாரம் தொடர்பில், சிறிலங்காவின் கள நிலைவரங்களை நேரில் கணடறிய வேண்டுமென, சிறிலங்காவுக்கு செல்லும் அவுஸ்திரேலியாவின் குடியேற்ற விவகாரங்களுக்கான அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

0 comments:

Post a Comment