Tuesday, May 1, 2012

ஆபாச படத்திற்குள் ஐரோப்பாவை தாக்குவதற்கான சதித் திட்டம்: அல்கொய்தாவின் புதிய யுக்தி....

அல்கொய்தா இயக்கதினர், தங்களது தாக்குதல் திட்டத்தை ஆபாச படம் ஒன்றிற்குள் மறைத்து வைத்து அனுப்பியது தற்போது தெரியவந்துள்ளது.


இந்தியாவின் மும்பை மாநகரில் கடந்த 2008ஆம் ஆண்டு நடத்திய தீவிரவாதத் தாக்குதலைப் போன்று, ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்ற அல்கொய்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது.


இதற்கான திட்ட விவரங்களை ஒரு ஆபாசப் படத்தில் சேர்த்து, அதை மெமரி டிஸ்க்கில் வைத்து அனுப்பியுள்ளனர். இது ஜேர்மன், ஆங்கிலம், அரபி ஆகிய மொழிகளில் பிடிஎப் போர்மட்டில் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மெமரி டிஸ்க்கைப் போட்டுப் பார்த்த போது அது ஒரு ஆபாசப் படம் என்று தெரியவந்தது. அதேபோல மற்றொரு பெயரிலும் ஒரு ஆபாசப் படம் இருந்தது. ஆனால் அந்த மெமரி டிஸ்க்கை ஆராய்ந்த போது தான் அதில் ஐரோப்பிய நாடுகளில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த விவரங்கள் ஒளிந்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து அதிர்ந்தனர்.

0 comments:

Post a Comment