Tuesday, May 1, 2012

வெளிநாடுகளின் அழுத்தங்கள், சூழ்ச்சிகளுக்கு இடமளியோம்!- மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த...

மனித உரிமைகள் என்ற பெயரில் எமது உரிமைகளை , தேசத்தின் உரிமையை உழைக்கும் மக்களின் உரிமைகளை பறித்துவிடப் பார்க்கின்றனர். இந்த நாட்டின் மனித உரிமைகளைப் பாதுகாக்க இவர்கள் செயற்படவில்லை. இவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். இன்னும் நாம் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருப்பதாக நினைத்துக் கொண்டு ஏகாதிபத்தியத்தின் மூலம் எம்மை அடிபணியச் செய்யப் பார்க்கிறார்கள். அதுதான் அழுத்தங்களை வழங்குகின்றனர்.
அவர்கள் யாழ்ப்பாணம் செல்வதையிட்டு நாம் சந்தோசப்படுகிறோம். ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் பிரதமராக இருந்த போது போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்தி யாழ்ப்பாணம், கிளிநொச்சி செல்ல கிடைக்கவில்லை. அவர் அநுராதபுரம் கூட அப்போது போகவில்லை. எமது மக்களும் படையினரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றியமையினால் தான் அவர்களால் யாழ்ப்பாணம் சென்று மே தினம் கொண்டாட முடிந்துள்ளது.





0 comments:

Post a Comment