Saturday, September 21, 2013

வாக்குச்சாவடியில் குளவிக் கூடு...


வவுனியா பட்டானிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலய வாக்குச் சாவடிக்கு அண்மையில் இருந்த குளவிக்கூடு ஒன்று இன்று அதிகாலை அகற்றப்பட்டது.

ஏற்கனவே புதுக்குளம் மகா வித்தியாலய வாக்குச் சாவடியில் குளவி தீண்டியதில் ஒரு அதிகாரி மரணமடைந்ததுடன் இருவர் காயமடைந்ததிருந்தனர்.
இதனை அடுத்து மற்றுமொரு ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் வவுனியா அரச அதிபரின் உத்தரவின் பேரில் மலேரியா ஒழிப்புப் பிரிவினர் மேற்படி குளவிக் கூட்டை அகற்றியதாக அப்பிரிவின் பொறுப்பதிகாரி கோபிநாத் தெரிவித்துள்ளார்.

Friday, September 20, 2013

அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததாக போலியான உதயன்பத்திரிகை அச்சிட்டு வினியோகம்- அனந்தியின் குரல் இணைப்பு.

அரசபடைகளதும் புலனாய்வளரகளதும் போக்கிலித் தனமும் தேர்தல் முறைகேடுகளும் -
அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததாக போலியான உதயன்பத்திரிகை அச்சிட்டு வினியோகம்- அனந்தியின் குரல் இணைப்பு
இன்று காலை  அரசாங்கத்தினாலும் அவர்களின் படையினராலும் அச்சிடப்பட்ட போலியான உதயன் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளரின் மனைவிஅனந்தி எழிலன் அரசாங்கத்துடன் இணைந்ததாக செய்தி வெளியிடப்பட்டு அனைவரது வீட்டு வாசலிலும் பத்திரிகை விநியோகிக்கப்பட்டு உள்ளது. 
பொய்யான பத்திரிகையை படையினர் விநியோகித்து சென்றவுடன் உண்மையான பத்திரிகை வெளிவந்த நிலையில் குடாநாட்டு மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனால் தான் அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக படைப்புலனாய்வாளர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்தி யை அனந்தி மறுத்ததுடன் உதயன் பத்திரிகை நிறுவனமும் தாம் இந்த பத்திரிகையை விநியோகிக்கவில்லை என மறுத்துள்ளது.

MS Officeஐ இனி Android கைபேசிகளிலும் பயன்படுத்தலாம்...



Friday, September 6, 2013

ஓமந்தையிலிருந்து கிளிநொச்சிக்கான ரயில் வெள்ளோட்டம்.


ஓமந்தையிலிருந்து கிளிநொச்சிக்கான ரயில் சேவை எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கவிருக்கின்ற நிலையில் பரீட்சார்த்த பயணமொன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

மணித்தியாலயத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்திலேயே இந்த பரீட்சார்த்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பயணத்தில் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம, ரயில்வே பொது முகாமையாளர் டீ.ஏ.பி.ஆரியரத்ன மற்றும் வடக்கு ரயில் பாதை நிர்மாணப்பணிக்கு பொறுப்பான இந்தியாவின் ஐகோன் நிறுவனத்தின் இலங்கை முகாமையாளர் எஸ்.எல்.குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரும் இந்த பயணத்தில் இணைந்துகொண்டனர்.

இந்த பயணத்தில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரும் இணைந்துகொண்டனர்.


Wednesday, September 4, 2013

தூக்குக் காவடி எடுத்து வந்த இளைஞன் மயங்கி விழுந்தார் : யாழில் சம்பவம்!


கோவிலுக்கு நேர்த்திக் கடனுக்காக தூக்குக் காவடி எடுத்த இளைஞர்; மயக்கமுற்ற நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்று பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். பன்னாலை பிள்ளையார் ஆலயத்திற்கு நேர்திக் கடனுக்காக தூக்குக் காவடி எடுத்துச் சென்ற சண்முகலிங்கம் கோகுலன்(வயது26) என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆலயத்திற்கு தூக்குக் காவடியுடன் சென்ற குறித்த இளைஞன் காவடியிலிருந்து இறக்கப்பட்ட பின்னர் மயக்கமுற்று வீழ்ந்ததாகவும் இதனையடுத்து அவர் மயக்கமுற்ற  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் கைது!


ராயனூர் இலங்கைத் தமிழர் முகாமில், சிறுமியொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவனொருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

ராயனூர் இலங்கைத் தமிழர் முகாமில் இடம்பெற்றுள்ள இரண்டாம் சம்பவம் இது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் ராயனூர் இலங்கை தமிழர் முகாமைச்சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், அதே முகாமை சேர்ந்த 7 வயது சிறுமியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி, தனக்கு நேர்ந்ததை பாட்டியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் உறவினர், கரூர் மகளிர் பொலிஸில் புகார் அளித்தார். அதன்படி, 2012 ஆம் ஆண்டு குழந்தை பாதுகாப்பு மற்றும் பாலியல் கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட மாணவனை பொலிஸார், நேற்று கைது செய்தனர்.

கடந்த 27 ஆம் திகதி அதே இலங்கைத் தமிழர் முகாமில், 14 வயது சிறுமியை வன்புணர்ந்ததாக இரண்டு சிறுவர்களை பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில், அதே முகாமில் பாலியல் தொல்லை தொடர்பாக மாணவனொருவன் கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.