Friday, July 20, 2012

யாழ்ப்பாணம் பழைய பூங்கா(OLD PARK) இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைப்பு .



யாழ்ப்பாணம் பழைய பூங்கா(OLD PARK) இன்று வெள்ளிக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. 
தமிழரின் வரலாற்றுப் பொக்கிஷமான இந்த பூங்கா 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த யுத்த நடவடிக்கையின் போது முற்றாக சிதைவடைந்துள்ள இந்தப் பூங்கா இன்றைய தினம் புதிப் பொலிவுடன் காணப்படுகின்றது.
யாழ் மாவட்ட செலயத்திற்கு முன்னால் உள்ள பழைய பூங்காவின் கேணியுடன் அண்டிய முன்பகுதி வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறியினால் பொழுதுபோக்கு மையமாக மாற்றப்பட்டு இன்று திறந்து வைக்கப்படுகின்றது.
18மில்லியன் ரூபா செலவில் இப்பூங்கா புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பழைய பூங்கா திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மகிந்த கத்துரு சிங்க, யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர் சிற்வேஸ்திரி அலன்ரின் மற்றும் யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.









Thursday, July 19, 2012

MP3 Quality Modifier: MP3 கோப்பின் தரத்தை அதிகரிக்கும் மென்பொருள்



தரம் குறைந்து காணப்படும் MP3 கோப்புகளை இயக்கும் போது சத்தம் குறைவாக இருப்பதுடன், கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி இருக்கும்.

மிக எளிதாக MP3 கோப்பின் தரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

இதற்கு முதலில் MP3 Quality Modifier என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

அதன் பின் இந்த மென்பொருளை ஓபன் செய்ததும்,  தோன்றும் விண்டோவில் மாற்றம் செய்ய வேண்டிய கோப்பை தெரிவு செய்து கொள்ளவும்.

தெரிவு செய்தவுடன், உங்களுக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து, Process என்ற பட்டனை அழுத்தினால் போதும். 

உங்களுடைய MP3 பைல் புதிய தரத்துடன் உருவாகும்.அடுத்து வரும் விண்டோவில் உங்களின் பழைய கோப்பின் அளவும், மாற்றம் செய்த கோப்பின் அளவும் மற்றும் எதனை சதவீதம் மாற்றம் செய்துள்ளது என்ற தகவல்களும் வரும்.


போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை சேதப்படுத்திய அறுவர் கைது!




இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் ஆறு பேரும் மது போதையில் இருந்த வேளை பஸ்வண்டி மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவிசாவளை - கொழும்பு பழைய வீதிப் பகுதியிலுள்ள ஹங்வெல்ல பிரதேசத்தில் வைத்து பஸ்வண்டியை சேதப்படுத்தியுள்ளனர்.தாக்குதலுக்கு இலக்கான பஸ்வண்டி மட்டக்குளி டிப்போவிற்கு சொந்தமானது என பொலிஸார் தெரிவித்தனர்.இவர்கள் ஆறு பேரும் ஹங்வெல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


யாழில் 85731 சதுரமீற்றர் பரப்பளவில் மிதிவெடி அகற்றப்பட்டுள்ளது!


  யாழ். குடநாட்டில் 85 ஆயிரத்து 731 சதுரமீற்றர் பரப்பளவிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 840 சதுரமீற்றர் பரப்பளவிலும் மிதிவெடி அகற்றி முடிக்கப்பட்டு அவை கையளிக்கப்படுவதற்குத் தயார் நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட மிதிவெடி செயற்பாட்டு அலுவலர் வ.முருகதாஸ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவின் ஜே/228 கிராம சேவகர் பிரிவில் புற்றுநோய் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள காணியில் 22 ஆயிரத்து 559 சதுரமீற்றர் பரப்பளவு துப்புரவு செய்யப்பட்டுக் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 18 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் ஒட்டுப்பேலி (ஜே/330) கிராம அலுவலர் பிரிவில் 54 ஆயிரத்து 411 சதுரமீற்றர் பரப்பளவில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் 2 ஆயிரத்து 417 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.இதேபோன்று எழுதுமட்டுவாழ் பகுதியில் 31 ஆயிரத்து 320 சதுரமீற்றர் பரப்பளவில் மிதிவெடி அகற்றல் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன. இந்தப் பகுதியில் 16 வெடிக்காத வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 6 பிரதேசங்களில் மிதிவெடி அகற்றல் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளன. பொன்நகர், ஸ்கந்தபுரம், மலையாளபுரம், உருத்திரபுரம், செல்வாநகர் ஆகிய பகுதிகளில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 388 சதுரமீற்றர் பரப்பளவில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.இந்தப் பகுதிகளில் 462 ஆயிரம் மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. இதனைவிடக் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் கோரக்கன் கட்டுப் பகுதியில் 84 ஆயிரத்து 176 சதுரமீற்றர் பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் 101 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. பரந்தன் சந்திக்கு அண்மையில் வைத்திலிங்கம் கமம் பகுதியில் 5 ஆயிரத்து 976 சதுரமீற்றர் பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் 15 மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்கள் விரைவில் கையளிக்கப்படவுள்ளதாகத் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பார்க்காத நித்தியானந்தா ரஞ்சிதா காமலீலைகள்.! (முழு வீடியோ)




சன் தொலைக்காட்சி மற்றும் நக்கீரன் பத்திரிகைக்கு கிடைத்து நித்தியாநந்தா ரஞ்சிதா காம லீலைகள் ஏனைய ஊடகங்களில் வெறும் 5 நிமிடங்களே வெளியிடப்பட்டது. இருப்பினும் அதன் முழுமையான காட்சிகளை பலர் பார்த்திருக்க மாட்டீர்கள்.
தற்போது நித்தி ரஞ்சி நடத்திய காம நாடகம் அமெரிக்க தடயவியல் மையத்தினால் உண்மையானதுதான் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நீங்கள் இதுவரை பார்த்திராத நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதாவில் காம லீலைகளை இந்த வீடியோவில் காணலாம்...
இது போலிச்சாமியார்களை நம்பி ஏமாறும் மடச்சாம்பிராணிகளுக்காவே தவிர வேறு எந்த நோக்கங்களுக்காகவும் அல்ல....


நெல்லியடி ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற புலிக்கொடி விவகாரம்...விசாரணை நடத்தப்படும் என்கிறார் அமைச்சர் கெஹலிய!





தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று நெல்லியடியில் நடைபெற்ற அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தின் போது புலிக்கொடி ஏந்தியவாறு மோட்டார் சைக்கிள்களில் வலம்வந்த மர்ம நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது,
நேற்றைய நெல்லியடி ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற புலிக்கொடி விவகாரம் தொடர்பில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அத்துடன் அந்த செய்தியாளர், ஐக்கிய தேசிய கட்சியினரால் யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமொன்றின் போதும் புலிக்கொடி ஏந்தியவாறு மர்ம நபர்கள் நடமாடியதை ஞாபகப்படுத்தினார்.
அந்த சம்பவத்தை அடுத்து விசாரணை நடத்தப்படும் என்று அரசாங்கம் அப்போது அறிவித்திருந்த போதிலும், இதுவரையில் சந்தேகநபர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
 அதேபோன்று, நேற்று நடைபெற்ற புலிக்கொடி ஏந்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளிலும் அரசாங்கம் பாராமுகம் காண்பிக்குமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு சற்றும் தாமதிக்காத அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 'விசாரணை நடத்தப்படும் என்று ஒரே வார்த்தையில் பதிலளித்துவிட்டு வேறு விடயம் தொடர்பில் கலந்துரையாட ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.