Friday, July 20, 2012

யாழ்ப்பாணம் பழைய பூங்கா(OLD PARK) இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைப்பு .



யாழ்ப்பாணம் பழைய பூங்கா(OLD PARK) இன்று வெள்ளிக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவினால் திறந்து வைக்கப்பட்து. 
தமிழரின் வரலாற்றுப் பொக்கிஷமான இந்த பூங்கா 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த யுத்த நடவடிக்கையின் போது முற்றாக சிதைவடைந்துள்ள இந்தப் பூங்கா இன்றைய தினம் புதிப் பொலிவுடன் காணப்படுகின்றது.
யாழ் மாவட்ட செலயத்திற்கு முன்னால் உள்ள பழைய பூங்காவின் கேணியுடன் அண்டிய முன்பகுதி வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறியினால் பொழுதுபோக்கு மையமாக மாற்றப்பட்டு இன்று திறந்து வைக்கப்படுகின்றது.
18மில்லியன் ரூபா செலவில் இப்பூங்கா புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பழைய பூங்கா திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மகிந்த கத்துரு சிங்க, யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர் சிற்வேஸ்திரி அலன்ரின் மற்றும் யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.









0 comments:

Post a Comment