Thursday, July 19, 2012

போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை சேதப்படுத்திய அறுவர் கைது!




இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியை சேதப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் ஆறு பேரும் மது போதையில் இருந்த வேளை பஸ்வண்டி மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவிசாவளை - கொழும்பு பழைய வீதிப் பகுதியிலுள்ள ஹங்வெல்ல பிரதேசத்தில் வைத்து பஸ்வண்டியை சேதப்படுத்தியுள்ளனர்.தாக்குதலுக்கு இலக்கான பஸ்வண்டி மட்டக்குளி டிப்போவிற்கு சொந்தமானது என பொலிஸார் தெரிவித்தனர்.இவர்கள் ஆறு பேரும் ஹங்வெல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


0 comments:

Post a Comment