Saturday, July 7, 2012

31வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் டோனி!

 டி20 மற்றும் ஒருநாள் போட்டி உலக‌‌க் கிண்ண வெற்றி நாயகனும், இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவருமாகிய மஹேந்திர சிங் டோனி, இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சிறந்த மற்றும் நிலையான விக்கெட் கீப்பர் இன்றி தவித்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, திறமையான வி்க்‌கெட் கீப்பிங் மட்டுமல்லாமல், சிறந்த துடுப்பாட்டக்காரராகவும் விளங்கிய டோனி, அணித்தலைவரானார்.
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். இவரது திறமைக்கு பரிசாக கவுரவ “லெப்டினன்ட் கர்னல்” பதவி வழங்கப்பட்டது.
கூலான அணித்தலைவர் என்று பெயரெடுத்துள்ள டோனிக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


   

0 comments:

Post a Comment