Sunday, July 15, 2012

பாலிவுட்டில் பிரபுதேவா இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை!



பாலிவுட்டில் பிரபுதேவா இயக்கும் புதிய படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிப்பது குறித்து இன்னும் உறுதியாகவில்லை என்று அப்படத்தின் தயாரிப்பாளர் குமார் தரானி கூறியுள்ளார். பாலிவுட்டில் அக்ஷய்குமாரை வைத்து இயக்கிய ரவுடி ரத்தோர் திரைப்படம் வெற்றியடைந்ததையடுத்து பிரபுவுக்கு தனி இடம் கிடைத்துள்ளது.

இந்நிலையில் மீண்டும் பிரபுதேவா பாலிவுட்டில் புதிய படம் இயக்குகிறார். அதில் குமார் தரானியின் மகன் கிரிஷ் நாயகனாக நடிக்கின்றார்.
இதில் கிரிஷுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகின.
ஆனால் இதை குமார் தரானி மறுத்துள்ளார். இதுவரை நாயகிகள் குறித்து முடிவு செய்யவில்லை என்று கூறியதுடன் இன்னும் ஒரு வாரம் பொறுத்திருங்கள் என்றும் அதன் பிறகு நாயகி குறித்துத் தெரிய வரும் எனவும் குமார் கூறியுள்ளார்.
இதற்குமுன், பாலிவுட்டில் ஸ்ருதிஹாசன்  அறிமுகமான "லக்" திரைப்படம் லக் இல்லாமல் திரையரங்குகளை விட்டு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

0 comments:

Post a Comment