Sunday, July 1, 2012

எல்லைப் பிரச்சினை குறித்து இந்தியா - பாகிஸ்தான் பேச்சு !


இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லைப் பிரச்சினை குறித்து கலந்தாலோசிப்பதற்காக பாகிஸ்தான் துணை ராணுவப்படை தலைவர் தலைமையிலான குழு இந்தியா வருகிறது. ஜூன் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரை சந்தித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
நாடுகளுக்கிடையே நடக்கும் கடத்தல்கள், துப்பாக்கிசூடுகள், இந்தியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கைதிகள் விவகாரம் போன்றவையும் விவாதத்தில் முக்கிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போதை மருந்து கடத்தலை தடுப்பது தொடர்பாக இருநாட்டு போதை எதிர்ப்பு படையினரும் இணைந்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

0 comments:

Post a Comment