Tuesday, July 17, 2012

ஸ்ரீலங்கா பிறீமியர் லீக் போட்டிகளுக்கு நெருக்கடி கொடுத்துள்ள ஜெயவர்த்தன!


இந்தியாவின் நடைபெற்ற இந்தியன் பிறீமியர் லீக்கை போன்று இலங்கையில் முதன் முறையாக ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.) போட்டிகள் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த எஸ்.எல்.பி.எல் போட்டிகள் தொடர்பாக கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாடு நடைபெற்றது.
இதில் பேசிய இலங்கை அணியின் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன புதிய கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, இலங்கை வீரர்களுடனான வருடாந்திர ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் கையெழுத்திட்டால் மட்டுமே, ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் (எஸ்.எல்.பி.எல்.) போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் 2012ம் ஆண்டுக்கான வீரர்களுடன் இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை. அவ்வீரர்களுக்கு இவ்வருடத்தின் முதல் காலாண்டுக்கான சம்பளம் வழங்கப்படவுமல்லை.
கடனில் மூழ்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், கடந்த வருடம் உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக மூன்று அரங்குகளை கட்டியதிலிருந்து பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்த அரங்குகளுக்காக சுமார் 700 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
எஸ்.எல்.பிஎல் போட்டிகள் எதிர்வரும் ஓகஸ்ட் 10ம் திகதியிலிருந்து ஓகஸ்ட் 31ம் திகதிவரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment