Friday, July 6, 2012

விவேக் - ஸ்ரேயா நடிப்பில் உருவாகும் சந்திரா!


கொலிவுட்டில் நல்ல தரமான படத்தைக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் பெண் எழுத்தாளர் ரூபா ஐயர்.கதை என்ற தேடலின் அடிப்படையில் ஒரு இளவரசியையும் அவள் சார்ந்த சமூகத்தையும் பற்றிய படத்துக்கு 'சந்திரா' என்று பெயர் சூட்டியுள்ளார்.இது குறித்து ரூபா ஐயர், சந்திரா இதிகாச படமோ அல்லது சரித்திர படமோ அல்ல, இது வரலாற்று பின்னணியில் பிணைக்கப்பட்ட சமூக கதையாகும்.படத்தில் இளவரசியாக நாயகி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடித்துள்ளார். ராஜகம்பீரத்துடன் நாயகனாக கணேஷ் வெங்கட்ராம் வருகிறார்.அழகான கொமெடியனாக விவேக் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் படத்தில் விஜயகுமார், டொக்டர் ஸ்ரீநாத், பிரேம், அமித்ரா, பத்மா வசந்தி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவாளர் தாஸ், இசையமைப்பாளர் கெளதம் மற்றும் பல தொழில் நுட்பக்கலைஞர்கள் பணியாற்றியுள்ளார்கள்.யுகபாரதி, பழனிபாரதி இவர்களோடு நானும் பாடலை எழுதியுள்ளேன்.இந்தியன் கிளாசிக் ஆர்ட்ஸ், நரசிம்மா ஆர்ட்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி 'சந்திரா' படத்தை இயக்கியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment