Saturday, July 7, 2012

தங்கர் பச்சான் படத்துக்காக உடல் எடையை குறைத்த சாந்தனு!

 தமிழ் சினிமாவில் 'களவாடிய பொழுதுகள்' படத்தை இயக்கிய தங்கர் பச்சான் சாந்தனு நடிப்பில் 'அம்மாவின் கைபேசி' படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் நாயகன் சாந்தனு உடன் இனியாவும் இணைந்து நடித்துள்ளார்.
படத்தின் கதாப்பாத்திரத்துக்காக எட்டு கிலோ உடல் எடையை கடுமையான பயிற்சியின் மூலமாக சாந்தனு குறைத்துள்ளார்.


இந்தப்படத்துக்காக இயக்குனர் தங்கர் பச்சான் என்னை கதாபாத்திரமாகவே மாற்றிவிட்டார். உடல் எடையை குறைத்து தாடி வளர்த்து படத்தில் நடித்துள்ளேன்.
உடல் எடையை குறைப்பதற்கு கோபி என்ற பயிற்சியாளர் எனக்கு உதவியுள்ளார்.  
அம்மாவின் கைபேசி படத்துக்காக என்னை முற்றிலும் மாற்றி கெமரா முன் இயக்குனர் நிறுத்தியுள்ளார் என்று 'அம்மாவின் கைபேசி' பட நாயகன் சாந்தனு கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment