Sunday, July 8, 2012

நீதிமன்ற இடைக்காலத் தடையுத்தரவால் நிறுத்தப்பட்ட நீர்வேலி வைரவர் ஆலய வேள்வி

யாழ். நீர்வேலி மேற்கு வைரவர் ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெறவிருந்த வேள்வி நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக இந்த ஆலயத்தில் பலி வேள்வி இடம் பெற்று வந்த நிலையிலும் தற்போது இந்த ஆலயத்தில் வேள்வி நடைபெறுவதைத் தடைசெய்யவேண்டும் என அந்த ஊரில் உள்ளவர்களில் ஒரு பகுதியினர் கேட்டுள்ள நிலையில் இந்தப் பிணக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு கோப்பாய் பொலிசாரால் கொண்டு செல்லப்பட்டது.இந்நிலையில் நீதிமன்றம இடைக்காலத் தடையுத்தரவை வழங்கியுள்ளது. இதனால் நேற்று கோவிலுக்கு பலி கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஆட்டுக் கடாய்கள் மற்றும் சேவல்கள் என்பவற்றிற்கு ஆலயத்தில் தண்ணீர் தெளித்துவிட்டு உரியவர்களினால் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது

   

0 comments:

Post a Comment