தமிழகத்தின் மேட்டுப்பட்டி அகதி முகாமைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரின் ஆறு வயது மகள் முகாமில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி சாலை பாலத்தின் கீழ் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அதனை உறுதி செய்வதற்காக சிறுமியின் சடலம், சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் இரு கண்களும் காயப்படுத்தப்பட்டிருப்பதுடன் உடலின் பல்வேறு இடங்களில் இரத்தக் காயங்கள் உள்ளன. மேலும், உடல் முழுவதும் இரத்தக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. வாயில் மண் வைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து எருமப்பட்டிப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment