Friday, June 22, 2012

ஐ.பி.எல் சூதாட்டத்திற்காக பாட்டியை கொலை செய்த பேரன்கள்...

ஐ.பி.எல் போட்டியில் பந்தயம் கட்டுவதற்காக, பாட்டியை அவரது பேரன்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான கோவாவில் உள்ள வெலம் பகுதியை சேர்ந்த லிண்டா கஜேதன் அந்ரதே என்ற பெண், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, அவரது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இவ்வழக்கில் ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில், இருவர், கொலை செய்யப்பட்ட லிண்டாவின் பேரன்கள்.
இது குறித்து கோவா எஸ்.பி அரவிந்த் கவாஸ் ஊடகத்தினரிடம் கூறுகையில், கடந்த மாதம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதில், எந்த அணிகள் வெல்லும் என்று கைதான நபர்கள் பந்தயம் கட்டியிருந்தனர். அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது. இதற்காக அவர்கள், லிண்டாவை கொலை செய்ய திட்டமிட்டனர்.
இதற்காக பேரன்களில் ஒருவர், லவ் பேர்ட்ஸ்களை தான் வாங்கியிருப்பதாகவும், அவற்றை பார்க்க வேண்டும் என்று, நவிலிம் பகுதியில் உள்ள தன் வீட்டிற்கு தாத்தாவை அழைத்துச் சென்றுள்ளான்.
அவர் வீட்டில் இல்லாத போது லிண்டாவை கொலை செய்து வீட்டிலிருந்த நான்கு லட்சம் ரூபாயை இவர்கள் கொள்ளையடித்து செலவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக, மூன்று சிறுவர்களும், கொலையை நடத்த திட்டம் தீட்டிய தட்டாராஜ் சடோஸ்கர்(21) மற்றும் அல்சின் மஸ்கர்னாஸ்(19), ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கிரிக்கெட் சூதாட்டத்துக்காக பாட்டியை பேரன்களே கொலை செய்த சம்பவம் கிரக்கெட் ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment