பாகிஸ்தானுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை வெற்றியடைய செய்த பெரேரா, ஹாட்ரிக் சாதனை ஒன்றையும் நிகழ்த்தினார்.
பாகிஸ்தானுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
இந்தப்போட்டியில் இலங்கை வேகப்பந்து வீரர் திஸாரா பெரேரா ஹாட்ரிக் சாதனை படைத்தார். 41வது ஓவரின் 2வது பந்தில் யூனிஸ்கானையும், 3வது பந்தில் சாகித் அப்ரிடியையும், 4வது பந்தில் சர்பிராஸ் அகமதுவையும் அவர் ஆட்டமிழக்க செய்தார்.
ஒருநாள் போட்டியில் நிகழ்த்தப்பட்ட 32வது ஹாட்ரிக் சாதனை இதுவாகும். ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த 4வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெரேரா பெற்றார்.
இதற்கு முன்பு இலங்கை வீரர்களில் லசித் மலிங்கா, சமிந்தா வாஸ், மெகரூப் ஆகியோர் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளனர்.
லசித் மலிங்கா 3 முறை (2007ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கெதிராக, 2011ம் ஆண்டு கென்யாவுக்கெதிராக, 2011ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கெதிராக) ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
சமிந்தாவாஸ் 2 முறை (2001ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கெதிராக, 2003ம் ஆண்டு வங்கதேசத்துக்கெதிராக) ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
மெகரூப் 2010ம் ஆண்டு இந்தியாவுக்கெதிராக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.
0 comments:
Post a Comment