Friday, October 28, 2011
Thursday, October 20, 2011
சிங்கில் பாட்டிற்கு ஆட்டம் போட்ட விதார்த்
மைனா படத்தின் மூலம் வெற்றிநாயகன் ஆன நடிகர் விதார்த், குருசாமி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடுகிறார்.பொதுவாக நடிகைகள்தான்
இதுபோன்று ஓரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போடுவார்கள். ஐய்யப்பசாமியின் மகிமைகளை சித்தரிக்கும் புதிய படம் குருசாமி.இந்தபடத்தில்,பாய்ஸ் மணிகண்டன், உதயதாரா, பருத்தி வீரன் சரவணன், டெல்லிகணேஷ், சங்கர் கணேஷ், வீரமணிதாசன், வடிவுக்கரசி, தனம் பிரேம்குமார், சூரி, விஜயகணேஷ், சிசர் மனோகர், நெல்லை சிவா, போண்டாமணி உள்பட 27 நடிகர் - நடிகைகள் நடித்துள்ளனர்.படத்தில் இடம்பெறும் முக்கியமான பாடல் ஒன்றில் ஆடுவதற்காக மைனா விதார்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் டைரக்டர். மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் தனது பணியை சிறப்பாக செய்து கொடுத்தாராம் விதார்த்.படத்திற்கு கே.ஜி.சீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, வசந்தமணி இசையமைத்துள்ளார். கதை- திரைக்கதை- வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஆர்.விஷ்ராந்த். சேனல் பைவ் புரொடக்ஷன் சார்பில் துளசி மாறன் தயாரிக்கிறார். சென்னை, புதுச்சேரி, ஆவுடையார் கோவில், இரும்பநாடு, திருச்செந்தூர், எரிமேலி, பம்பா, மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
நடிகை சி்த்தாராவின் ஆசை
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்கள் அனைத்திலும் நடித்தவர் நடிகை சி்த்தாரா.தமிழில்
புது புது ராகங்கள், புது வசந்தம், உன்னை சொல்லி குற்றமில்லை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.இதற்கான காரணம் குறித்து அவர் கூறியிருப்பதாவது, நிறைய வரன்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன ஆனால் வரும் வரன்கள் எல்லாம், திருமணத்திற்கு பின்பு சினிமாவில் நடிக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள்.திருமணத்திற்கு பின்ன நல்ல வாழ்க்கை அமைந்தால் நடிக்காமல் இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை என்றால் என்ன செய்வது என்று எண்னினார்.ஆனால் என்னை பெண் பார்க்க வருபவர்களிடம் பரந்த மனப்பான்மை இல்லை. அப்படி இல்லாதவர்களிடம் நான் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்று கூறினார்.சினிமாவிற்கு முன்பு வரை சினிமாவை பற்றி நிறைய பயம் இருந்தது, ஆனால் சினிமாவிற்கு வந்தபின்னர், அதில் ஒரு நம்பிக்கையும், ஒரு பக்தியும் ஏற்பட்டது.சினிமாவை தேடி நான் வரவில்லை, சினிமா தான் என்னை தேடி வந்தது, சினிமாவை ரொம்பவே மதிக்கிறேன் அதனால், திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன் எனறுநடிகை சித்தாரா கூறியுள்ளார்.25 வருடங்களாக நான் சினிமாவில் இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.நான் யாரையும் காதலிக்கவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன், காதலித்து இருக்கிறேன் அது, கல்யாணம் வரை போகவில்லை காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.இவர் என்னை புரிந்துகொண்டு, நீ எப்பவும் போல நடிக்கலாம் என்று சொல்கிற கணவர் தான் வரவேண்டும், அப்படி ஒருவருக்காக காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
Saturday, October 8, 2011
பென்டிரைவில் கோப்புகள் எல்லாம் ஐகனாக(Icon) மாறிவிட்டிருந்தால்...
பென் டிரைவில் உள்ள கோப்புகள் மற்றும் போல்டர்கள் வைரஸ்களின் பாதிப்பு காரணமாக சிலநேரம் ஐகான்களாக மாறிவிடுகின்றன.
அந்த மாதிரி உள்ள கோப்புகளை திறக்க முயற்சித்தாலும் திறக்காது. இதனால் அதில் உள்ள தகவல்கள் அழிந்துவிடவில்லை.தற்போதைக்கு காட்டும் போது ஐகானாக இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது?
1. Start - > Run செல்லவும்
2. அதில் Cmd என்று தட்டச்சிடவும்.
3. பின்னர் வரும் கமாண்ட் விண்டோவில் கீழ்க்கண்ட வரியை அடித்து எண்டர் தட்டவும்.
இதில் X என்பது உங்கள் பென் டிரைவின் எழுத்தைக்குறிக்கும்
.attrib -h -r -s /s /d X:\*.*
இறுதியாக உங்கள் கணிணியை Malwarebytes மென்பொருள் கொண்டு
Full scan செய்து கணினியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
4. இப்போது உங்கள் கோப்புகளும் போல்டர்களும் மீட்கப்பட்டிருக்கும்.
கிளிநொச்சியில் வீடு புகுந்து குடும்பஸ்த்தர் வெட்டிக் கொலை: பெண் ஒருவர் படுகாயம்!

வட்டக்கச்சியில் வீடு ஒன்றுக்குள் நேற்று அதிகாலை புகுந்த ஆயுததாரிகள் குடும்பஸ்தர் ஒருவரை வெட்டிக் கொலை செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவீட்டில் இருந்த பெண்ணையும் ஆயுததாரிகள் கழுத்தில் குத்திக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியின் மாயவனூர் சிவன் கோயிலை
அண்மித்துள்ள பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்திலேயே இராணுவக் காவலரண் ஒன்று இருக்கின்றபோதும் கொலையாளிகளால் எதுவித இடையூறும் இன்றித் தப்பிச் செல்ல முடிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
50 வயதுடைய தம்பிராசா சௌந்தர்ராஜன் என்பவரே சம்பவத்தில் கொல்லப்பட்டார். இவர் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்தவர். தொழில் நிமித்தம் வட்டக்கச்சியில் தங்கியிருந்தார்.
இவரது உறவினரான மாயவனூர் தியாகராசா சாந்தி (வயது 39) கத்தியால் குத்தப்பட்டதில் கழுத்தில் படுகாயமடைந்தார். கிளிநொச்சி வைத்தியசாலøயில் சேர்க்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காகப் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவரும் இவரது இளவயது மகளும் அண்மையிலேயே அந்தப் பகுதியில் மீளக்குடியமர்ந்திருந்தனர். இவர்களது வீடு பாதுகாப்பானதாக இருக்கவில்லை.
வீட்டுக்குக் கதவு, ஜன்னல்கள் இல்லை. மகளின் பாதுகாப்புக்காக இரவில் எப்போதும் தூக்கமின்றியே இருக்க வேண்டியிருக்கிறது என்றார் சாந்தி.
இவர்களது உறவினரான சௌந்தர்ராஜன் கடந்த 3 மாதங்களாக இவர்களது வீட்டில் தங்கியிருக்கிறார். தொழில் நிமித்தம் அவர் அங்கு தங்கியிருந்துள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் நானும் மகளும் படுத்திருந்த அறைக்குள் டோச் அடித்தபடி ஒருவர் வருவதைக் கண்டு பயந்துபோய் யாரது? என்று சத்தமிட்டேன். உடனே எனது கழுத்தில் கூரான ஏதோ ஒன்றால் குத்திவிட்டு அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார் என்றார் சாந்தி.
அதன் பின்னர் சத்தமிட்டு அயலவர்களைக் கூட்டி அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருக்கிறார் அவரது மகள்.அம்மாவை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முயன்றபோதே சொந்தர்ராஜன் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டோம்'' என்கிறார் சாந்தியின் மகள்.
உடனடியாக கிளிநொச்சிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சௌந்தர்ராஜனின் சடலத்தின் அருகே டோச் லைற் ஒன்று கண்டெடுக்கப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.
கிளிநொச்சி நீதிவான் பெ.சிவகுமார் நேற்றுக் காலை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அவரது உத்தரவுக்கமைய கொலையுண்டவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் அது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.சௌந்தர்ராஜனின் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இன்னும் சில தினங்களில் அவர் நாடு திரும்ப இருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
Facebook க்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு
களவாடப்படும் சமூகத்தளங்களின் கடவுச் சொற்கள்

2009 ஆம் ஆண்டிலிருந்து Facebook, Twitter போன்றவற்றின் கணக்குகளைத் திருட்டுபவர்களின் தொகை இரண்டு மடங்காகியுள்ளதாகவும் இதனால்இதில் பத்தில் 3 பங்கு இளையோர்களினது கணக்குகள் களவாடப்படுகின்றது என்றும் கூறப்படுகின்றது.
திருடர்கள் பெரும்பாலும் பயனாளர்களின் கணக்குகளைச் செய்திகள் அனுப்புவதன்மூலம் கவனித்துக்கொள்வர்.
இதன் மூலமே யார் யார் உள்வருகின்றார்கள் என்பதை அப்பயனாளரும் அறிந்துகொள்வார்.
அமெரிக்காவில் நடாத்தப்பட்ட ஆய்வில் தமது கணக்குகளிற்குள் நுழைந்து திருடுபவர்கள் யாரென்பதைப் பெரும்பாலானவர்கள் தெரிந்துவைத்திருந்தனர்.
இதில் 72 வீதத்தினர் உளவு பார்ப்பதாகவும் 65 வீதத்தினர் திருடுவதாகவும் குறிப்பிட்டனர்.
ஒருவர் தவறுதலாகத் தனது கணக்கினைத் திறந்துவிட்டுச் சென்றபோது, அதனை அவரது இன்னொரு நண்பர் பாவித்துக் கருத்துக்களைத் தெரிவித்துக் குழப்பியடித்துவிட்டுச் சென்றிருந்தார்.
இவ்வாறான குழப்பத்திற்கு 6 மில்லியன் ருவிற்றர்களைக் கொண்டுள்ள நடிகர் Ashton Kutcher உம் இதனால் பாதிக்கப்பட்டவராவார்.
கோழியைக் கொல்லும் கொடூரச் சிலந்தி!

கோழியைச் கொன்று சாப்பிடுகின்ற நிலையில் சிலந்திகள் உள்ளன. இவை சிலந்திகளிலேயே மிகப் பெரியவையாகவும் விசமுள்ளவையாகவும் இருக்கின்றன.
குறித்த சிலந்தியின் விஞ்ஞானப் பெயர் "thera" and "phosa" என்ற கிரேக்க சொல்லிலிருந்து உருவாகியுள்ளது.
இந்தச் சொல்லின் விளக்கமாக ஒளியுடைய காட்டு விலங்கு என்று பொருளாகும்.
இவை ஹம்மிங் பேர்ட் எனும் பறவையையும் உண்ணும். இந்த சிலந்தி வகையை மேற்குலகு ஆச்சரியமான பெரிய சிலந்தியாகவே என்றும் பார்க்கின்றது.

மனிதக் கழிவு வாயுவில் இயங்கும் வாகனம்

அந்நாட்டின் மலசலகூட உற்பத்திகள் நிறுவனங்களில் ஒன்றான ரோரோவால் இவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. யப்பானில் மலசலகூடங்களில் இருந்து 50 சதவீதமான காபனீரொட்சைட் மாசுகளை 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் 50 சதவீதத்தால் குறைத்தல் என்கிற திட்டத்தின் கீழ் இம்மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. இம்மோட்டார் சைக்கிள்களில் இருக்கை காணப்பட வேண்டிய இடத்தில் மலகூடம் பொருத்தப்பட்டு உள்ளது. பயணங்களை ஆரம்பிக்க முன்னர் மலசலகூடங்களுக்கு இனி மேல் ஓட வேண்டிய தேவை இல்லை. பயணங்களின் இடையில்கூட மல கஷ்டங்களுக்கு உள்ளாக வேண்டியும் இராது.
யாழ்ப்பாணத்தில் “face book காதல்” குறுந்திரைப்படம்--- கோலிவுட் வடிவில்...///

முதன்முதலாகவும் முற்றுமுழுதாகவும் யாழ்ப்பாண மண்ணில் தயாரிக்கப்பட்டு மிக விரைவில் வெளியிடப்படவிருக்கின்றது தேவி பிக்சர்ஸின் முகப்பு புத்தக காதல் எனும் குறும்படம்.
கோலிவுட் வடிவில் உருவாகி, தற்கால சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தின் கலாசாரப் பிறழ்வு, அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் மற்றும் வறுமையில் வாடிப் பின் வளர்வது என்பது தொடர்பில் எடுத்துரைக்கும் ஒரு துல்லியமான குறும்படம் இது.
இத் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர்கள், யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளிடையே ஏற்பட்டுள்ள முகப்பு புத்தகத்தின் (face book) ஆக்கிரமிப்பு, இதனால் ஏற்பட்ட காதல் என்பதை எடுத்துக் கூறி அதனைத் தவிர்க்குமாறும் எடுத்துரைக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் ''கதை வறுமையில் வாழும் சிறுவன் பெரியவனாகும் போது எப்படி இருப்பான்?'' என்பதே.
அத்துடன் ஏழ்மையில் வாடி, ஒருநேர உணவுக்காகக் கையேந்தும் சிறுவர்களின் வாழ்வாதார வளர்ச்சியை உயாத்த எம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும் இக் குறும்படம் எடுத்துக் காட்டி நிற்கின்றது.
எனவே இக் குறும்படம் மூலம் வசதி படைத்த மக்களுக்கு ஒரு உண்மையான, யாழ்ப்பாண மண்ணின் தற்கால நிலைமையியை எடுத்துக் கூறும் ஒரு குறும்படமாகவும் இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தின் இசை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு றாகுல் தயாரிப்பில் மற்றும் இந்ததிரைப்படத்தில் நடிப்பவர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக நடிப்பை வெளிக்காட்டுகின்றனர். நடிகர்களின் பெயர்கள் கபில், நிவே, பிரதீப், றெக்கி, டிபியா, வேபிசபி.
Friday, October 7, 2011
உங்களின் அனைத்து கூகுள் தகவல்களையும் தரவிறக்கம் செய்வதற்கு

நாம் அனைவரும் இன்று பயன்படுத்துவதில் பெரும்பாலான சேவைகள் ஏன் கிட்டத்தட்ட அனைத்து சேவைகளுமே கூகுள் நிறுவனத்தினால் அளிக்கப்படுபவை தான்.
நாம் பயன்படுத்தும் அல்லது சேமிக்கும் அனைத்து தகவல்களும் நாம் கணக்கு திருடப்பட்டால் கோவிந்தாதான்.
அதனை தவிர்க்க நீங்கள் கூகுள் சேவைகளில் பயன்படுத்தும் அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பக்-அப்(Backup) எடுக்கலாம். இதனை செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.
1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழையுங்கள்.
2. அதில் உங்கள் ப்ரொபைல்(Profile) அடையாள படம் மேலே உள்ள பட்டையில் இருக்கும். அதன் மீது க்ளிக் செய்து Account Settings என்பதை செலக்ட் செய்யவும்.
3. இப்போது தோன்றும் புதிய விண்டோவில் இடதுபுற பேனலில் இருக்கும் Data Liberation என்பதை செலக்ட் செய்யவும்.
4. இப்போது Download Your Data என்ற பட்டனை உங்களின் தகவல்களை ஒரு கோப்பாக தரவிறக்கி கொள்ளலாம்.
5. ஒரு குறிப்பிட்ட சேவையின் தகவலை மட்டும் தரவிறக்கம் செய்ய விரும்பினால் அந்த சேவையினை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
மிருக வதையின் உச்சக்கட்டம்! மிருகமாக மாறிய மனிதர்கள்!! (காணொளி இணைப்பு)

மிருக வதைக்கு எதிராக பலதரப்பட்டவர்கள் குரல்கொடுத்து வந்தாலும் கூட அதனை முற்றுமுழுதாக நிறுத்த முடியாது போய்விட்டது.ஆனால் கீழே காண்பிக்கப்படும் காணொளி மிருக வதையின் உச்சக்கட்டத்தையே காண்பிக்கின்றது.பசுவைக் கொன்று,அதன் வயிற்றில் இருந்த கன்றுக் குட்டியை வெளியில் எடுத்து அதன் பின் அதனையும் கொடூரமாகக் கொலை செய்கின்றனர் மனித வடிவில் உள்ள மிருகங்கள்.
கிறீன் டீ குடித்தால் உடம்பு மெலியுமாம்! பெண்களின் கவனத்துக்கு

எலிகளை வைத்து ஆய்வு நடத்தினர். இரு
பிரிவாக எலிகளை பிரித்து, அவற்றுக்கு சம அளவில் அதிக கொழுப்புள்ள உணவுகளை கொடுத்து வந்தனர். ஒரு பிரிவு எலிகளுக்கு மட்டும், கிறீன் டீயில் உள்ள எபிகேலோகேட்டசின்-3-கேலேட் (இஜிசிஜி) என்ற மூலப்பொருள் கொடுக்கப்பட்டது.
ஆய்வில் இஜிசிஜி மூலப்பொருள் கொடுக்கப்பட்ட எலிகளின் உடல் எடை, மற்ற எலிகளை காட்டிலும் குறைவாக இருந்தது. அவற்றின் உடலில் குறைவான அளவு கொழுப்பு கிரகிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஜோசுவா லேம்பர்ட் கூறும்போது, கிரீன் டீயில் உள்ள இஜிசிஜி மூலப்பொருள், உடல் கொழுப்பு கிரகிப்பதை கணிசமாக குறைக்கிறது. மேலும் உடலில் இருக்கும் கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.
தினமும் 10 கப் கிரீன் டீ குடிப்பதன் மூலம் மனிதர்களும் இந்த பயனை அடைய முடியும். குண்டு உடல் உள்ளவர்கள் உணவு பழக்கத்தில் பெரிய மாற்றங்கள் செய்யாமல் உடல் எடையை நன்றாக குறைக்க முடியும். இதுகுறித்து மேலும் விரிவான ஆய்வு நடந்து வருகிறது என்றார்.
இதயநோய், புற்றுநோய் போன்றவற்றுக்கும் கிரீன் டீ அருமருந்து என்று ஏற்கனவே பல ஆய்வுகள் கூறியுள்ளன. இனி கிறீன் டீக்கு பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் என நம்பப்படுகின்றது.
பாம்பையே சாப்பிடும் பாம்பு! அதிர்ச்சிப் படங்கள்
நாய் நாயைச் சாப்பிடுவதைப் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் பாம்பு ஒன்று பாம்பையே சாப்பிடுவதைப் பார்த்துள்ளீர்களா...?தென்னாபிரிக்காவில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் இருந்தே இத்தகைய காட்சிகள் கிளிக் செய்யப்பட்டுள்ளன.இத்தகைய அரிய காட்சிகளை Piet Heymans என்ற படப்பிடிப்பாளரே படம் பிடித்துள்ளார்.
குறித்த பாம்பு மற்றைய பாம்பை 52 நிமிடங்களாக விழுங்கியுள்ளது.

அரசியல் தீர்வினை முஸ்லிம் மக்களும் ஏற்க வேண்டும்! சம்பந்தன்!!

இரா. சம்பந்தன் வெளியிட்ட அறிக்கை வருமாறு,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – இலங்கைத் தமிழரசுக்கட்சி கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது.
ஆனாலும் இப்பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் பலம் எமக்கு இல்லாமல் இருப்பினும் பிரதேச மக்களின் நலன்களுக்காக பயன் தரமிக்க பங்களிப்பை வழங்கமுடியும் என்பதை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் எமக்கு இருக்கின்றது என்பதைத் தேர்தல் மூலம் தெரியப்படுத்தலாம்.
மேலும் தமிழ்வாக்காளர்கள் ஒன்றுபட்டு நின்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு- இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கொள்கைகளை ஒருமனதாக ஆதரிக்கின்றோம் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டும்.
யுத்தம் மற்றும் பேரழிவிற்குப் பின்னர் தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றைக்காண வேண்டும் என்ற தேவை பொருத்தமான இடங்களில் வழமைக்கு மாறான முக்கியத்வத்துடன் உருவாகியுள்ளது.
நாட்டின் எதிர்கால நலன் குறித்த ஏனைய முக்கிய பிரச்சினைகள் தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காணுவதுடன் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.
ஜனநாயகம், அடிப்படை மனித உரிமைகள், அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் தான் இவற்றை அடையலாம்.
தமிழ் மக்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும்போது மேற்கூறப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் தங்கள் வாக்குகளை அளிக்கும்போதுதான் தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதான தீர்வைக் காணக்கூடியதாக இருக்க முடியும்.
அத்துடன் அவர்களுக்கு சமமான பிரசைகள் என்ற அந்தஸ்தை வழங்குவதாகவும் அதுஅமையும்.
தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை உருவாக்குமுகமாக அரசாங்கம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது.
தமிழ் மக்கள் பாராளுமன்றத் தேர்தலிலும் உள்ளுராட்சித் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் தமிழத்தேசியக் கூட்டமைப்புக்கு பலமான ஆதரவை நல்கியதுடன் தங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை பேச்சுவார்த்தை மூலம் காணும்படி தெளிவான ஜனநாயக ஆணையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியுமுள்ளனர்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இப்பணியை செய்து முடிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அந்த நீண்ட அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.
யாழில் முதியோர் தொகை அதிகரிப்பு! சமூக சேவைகள் பணிமனை!

யாழ். மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்களில் பெருமளவு பிள்ளைகளினால் பெற்றோர்கள் சேர்க்கப்படுவதாக சமூக சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது. தமது பெற்றோர்களை வீடுகளில் வைத்துப் பராமிப்பதற்கு பிள்ளைகள் தயங்குவதாகவும் பெரும் சிரமமாக கருதுவதாகவும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிப்பதாக இந்தப் பணிமனை தெரிவித்துள்ளது. குறிப்பாக அரச உத்தியோகத்திலுள்ள பிள்ளைகள் தங்கள் வேலை நிமித்தம் உரிய முறையில் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் தங்கவைத்து பராமரிப்பதற்கான தொகையை மாதா மாதம் கட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு இங்கு பாரம்பரியச் சொத்துக்களை பராமரிக்கும் பெற்றோர்களின் தொகையும் தனிமையில் வீடுகளில் வாழும் முதியவர்களின் தொகையும் அதிகரித்துள்ளது என யாழ் மாவட்ட செயலக சமூக சேவைகள் பணிமனை சுட்டிக்காட்டியுள்ளது.
பால் ஆடை உற்பத்தி செய்து ஜேர்மன் விஞ்ஞானி வெற்றி!
பாலினால் பின்னப்பட்ட ஆடை வகைகளை உற்பத்தி செய்வதில் ஜேர்மன் விஞ்ஞானியொருவர் வெற்றி கண்டுள்ளார்.
ஜேர்மன் ஹெனோவரில் வசிக்கும் இவ் விஞ்ஞானியான 28 வயதுடைய ஏன்க் டொமஸ் எனும் யுவதியே இவ்வாறு பாலாலான ஆடைகளை உற்பத்தி செய்துள்ளார்.
பால் மற்றும் பல திரவியங்களை பயன்படுத்தி இவ் ஆடைக்கான துணிவகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அவர் இத் துணிவகைகளைப் பயன்படுத்தி QMilch எனும் பெயரில் பல அலங்கார ஆடைகளை தயாரித்துள்ளார்.
தோலை பாதுகாப்பாக்க வைத்திருக்க கூடிய விதத்தில் புரதச் சத்து அடங்கிய வகையில் இவ் ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஆடை வகைகள் எதிர்காலங்களில் நவீன ஆடையலங்கார உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் யாராவது உங்களைத் பின் தொடராமல் தடுப்பது எப்படி?
சாதாரணமாகவே யாரும் எம்மை பின் தொடர்வது யாருக்குமே பிடிப்பதில்லை. அப்படியிருக்கையில் ஒரு தளமானது நாம் என்ன செய்கிறோம், எங்கே செல்கிறோம் என்பதை அறிய முற்பட்டால் எப்படியிருக்கும்.Facebook உங்களைத் தடந்தொடரும் என்பது உண்மையானால் அது உங்களுக்குப் பிரச்சினையா என்று கேட்டதற்குப் பதிலாக ஆம் என்ற பதிலே வந்தது. ஆனால் எல்லாத் தளங்களிலும் இது செயற்படாது.
இணையத்தளம் பற்றித் தெரிந்தவர்களுக்கு அது எவ்வாறு செயற்படுமென்பதும் தெரிந்திருக்கும். இதனால் ஒவ்வொரு தடவையும் ஒரு Facebook, Google+ அல்லது Twitter இலிருந்து ஒரு பக்கத்திற்குச் செல்லும்போதும் அந்தப் பக்கத்தின் லிங்கின் பின்னாலுள்ள கடவுச்சொல் உண்மையில் அத்தளத்திலும் காணப்படும்.
இதனால் அவர்களுக்கு நீங்கள் இந்தத் தளத்தில் இருக்கின்றீர்கள் என்பதைக் கண்டுபிடிப்பார்கள்.
அத்துடன் ஒரு தளத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்கின்றீர்கள் என்பதையும் எத்தனை தடவை செல்கின்றீர்கள் என்பதுபோன்ற தகவல்களையும் அறிந்துகொள்வார்கள்.
இதனால் இதுபற்றித் தெரிந்த சிலர் இதனை இல்லாமற்செய்ய முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்கின்றார்கள். பல உலாவி plug-in கள் குக்கீயினைக் கட்டுப்படுத்த உதவும்.
அத்துடன் சில உலாவிகளில் இந்த முறை முன்பே காணப்பட்டிருக்கும். எனினும் இவற்றின் பொதுவான நிலை அனைத்துக் cookies இனையும் நுழையவிடுவதுதான். இதனால் இத்தகவல் தெரியதாதல்ல.
இது கணக்குடன் காணப்படும். பல சந்தர்ப்பங்களில் இது உங்களது அடையாளத்துடன் நேரடியாகவே இணைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு தடந்தொடர்பவர்கள் யாராவது உங்களைப் பின்பற்றினால் அவர்கள் உங்களது IP முகவரியை அல்லாது நீங்கள் ஒன்லைனில் என்ன செய்கின்றீர்களென்றே அறியவிரும்புவார்கள்.
tor இன் பயன்பாடில்லாமல் அல்லது அடையாளந்தெரியாத Proxie களைப் பயன்படுத்தாமல் கூகிளைப் பயன்படுத்தமுடியாது. இவை உண்மையில் எரிச்சலூட்டுபவையாகவும் மெதுவானவையாகவும் காணப்படுகின்றன.
ஆனால் பயர்பொக்சிலிருந்து கூகிளிற்கு தேடுதல் பகுதிகளை அனுப்பும் Track Me Not என்ற Plug-in களைப் பயன்படுத்துவது உங்களது உண்மையான தேடுதல் பகுதிகள் வேறுபலவற்றுடன் கலந்து உங்களுக்கு மிகவும் சவால்மிக்கவையாக இருக்கலாம்.
Gmail மற்றும் IMAP இன் பயன்பாடுகளும் கூகிள் சேவைக்குள் நுழையாமல் இருப்பதும் சேகரிக்கப்படும் தரவுகளைக் குறைக்கும்.
சாதாரணமானவர்களுக்கு இந்த நிலையைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கலாம். ஆனால் cookies இனை இல்லாமற்செய்வது இப்பிரச்சினைகளைத் தீர்க்கும்.
இப்பிரச்சினையைத் தீர்க்க நீங்கள் ஒரு வித்தியாசமான இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள். இதற்கு குறோம் பொருத்தமாக இருக்கும்.
கூகிள் போன்ற பொதுவான cookies உடன் காணப்படும் சமூக வலையத்தளங்களிற்காகவும் மட்டுமே இதனைப் பயன்படுத்தவும்.
குறோம் மூலம் செல்வது பயனுள்ளதாக இருக்கும்.
உங்களது கணணியில் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்கு

இது போன்ற சந்தர்ப்பங்களில் கணணி அதிக நேரம் பயன்படுத்தப்படப்போவதில்லை என்று எண்ணினால் அது பயன்படுத்தும் மின்சக்தியைப் பெரும் அளவில் குறைத்து மின்சக்தி வீணாவதனைத் தடுக்கலாம்.
நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி எனில் ஸ்லீப் மோட்(Sleep mode/Standby) என்ற வகையில் அதனை அமைக்கலாம். இன்னும் கூடுதலாக மின்சக்தியை மிச்சப்படுத்த ஹைபர்னேஷன்(hibernation) என்னும் நிலைக்கு மாற்றலாம்.
இந்த இரண்டு நிலையிலும் மின்சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. மேலும் திரும்ப பணியாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து இயக்க முற்படுகையில் எங்கு எந்த புரோகிராம்களைத் திறந்திருந்தோமோ அந்த நிலையிலும் எந்த கோப்பில் எங்கு பணியாற்றிக் கொண்டிருந்தோமோ அந்த இடத்திலும் நமக்குக் கணணி இயக்கப்பட்டுக் காட்டப்படுகிறது.
Sleep mode நிலையில் மின்சக்தி மிச்சப்படுத்தப்பட்டாலும் உங்கள் கணணி இயக்க நிலையில் உள்ளது. விண்டோஸ் சிஸ்டம் அப்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் ராம் மெமரியில் இருக்கும் அப்போது திறந்து வைக்கப்பட்டுப் பணியில் இருக்கும் கோப்புகள் ஆகியவற்றை உயிர்த்துடிப்புடன் வைத்திட மின்சக்தி தேவைப்படுகிறது.
ஆனால் ஒரு பெர்சனல் கணணி hibernation நிலையில் வைக்கப்படுகையில் சிஸ்டமானது ராம் நினைவகத்தில் உள்ள அனைத்தையும் ஒரு கோப்பில் கொப்பி செய்து ஹார்ட் ட்ரைவில் வைக்கிறது.
பின்னர் கணணியை முழுவதுமாக ஷெட்டவுண் செய்கிறது. எனவே ஹைபர்னேஷன் நிலை கூடுதலாக மின்சக்தியை சேமிக்கிறது. ஆனால் சற்று மெதுவாக பழைய நிலைக்குத் திரும்புகிறது.
இன்றைய காலத்திய பெர்சனல் கணணி ஸ்லீப் நிலைக்குச் செல்வதும் மீண்டும் இயக்கத்திற்கு வருவதும், சொடக்குப் போடும் நேரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ஹைபர்னேட் ஆவதற்கு ஏறத்தாழ அரை நிமிட நேரமும் மீண்டும் செயல்பாட்டிற்கு அதிலிருந்து வருவதற்கு அரை நிமிட நேரமும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மிக அதிக நேரம் நிறுத்திவைத்திடப் போவதாக இருந்தால் ஹைபர்னேஷன் நிலையிலும் குறைவான நேரமே இயக்காமல் இருக்கப் போவதாக இருந்தால் ஸ்லீப் நிலையிலும் கணணியை வைப்பது நல்லது.
நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால் டெஸ்க்டொப் திரையில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும்.
கிடைக்கும் விண்டோவில் Screen Saver என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Power பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Hibernate டேப்பில் கிளிக் செய்து Enable Hibernation. என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
அடுத்து Apply பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்ததாக Power Schemes டேப்பில் கிளிக் செய்து standby மற்றும் hibernate ஆப்ஷன்களையும் காணலாம்.
நீங்கள் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 பயன்படுத்துபவராக இருந்தால் ஸ்டார்ட் கிளிக் செய்து Power என டைப் செய்திடவும். அடுத்து Power Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இடதுபுறப் பிரிவில் Choose when to turn off the display என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Sleep ஆப்ஷன் இருப்பதனைப் பார்க்கலாம். ஹைபர்னேஷன் பற்றி எதுவும் இருக்காது.
எனவே Change advanced power settings என்பதில் கிளிக் செய்திடவும். “Sleep after” மற்றும் “Hibernate after” ஆகிய ஆப்ஷன்களைப் பெற Sleep பிரிவை விரிக்கவும். இங்கு நீங்கள் விரும்பும் வகையில் செட்டிங்ஸ் ஏற்படுத்தலாம்.
iPhone 4S பற்றிய புத்தம் புதிய தகவல்கள்

இதற்கு முன்வெளிவந்த iPhone 4 இனைவிடவும் வேகமானதாகவும் சிறந்த நிழற்படக் கருவியைக் கொண்டும் பல நிறங்களைக் காட்டுவதாகவும் இது காணப்படுகின்றது.
இதற்கு மனிதர்களின் பேச்சினை விளங்கிக்கொள்ளக் கூடிய தன்மையும் காணப்படுவதுதான் இதன் சிறப்பம்சம். எனினும் இது முற்றுமுழுதாகவே iPhone 4 இனை ஒத்தவடிவமாக உள்ளது.
இது முந்தையதைவிடவும் 7 மடங்கு வேகமாக உள்ளது. இதனை ஒக்ரோபர் 7 இலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Siri என்ற புதிய அமைப்பில் குரல் செயற்படுத்தி காணப்படுவதால் இதனால் இயற்கையான மனித மொழிகளை அறிந்து கொள்ளக்கூடியவாறு உள்ளது.
அதாவது நாம் இன்றைய காலநிலை என்ன என்று கேட்டால் அது ஒன்லைனில் காலநிலை எதிர்வு கூறல் அறிக்கைமூலம் பதிலளிக்கும்.
iPhone 4S வரமுன்னர் iOS 5 என்பதும் வெளிவரவுள்ளது. இதிலும் பல புதிய அம்சங்கள் காணப்படுகின்றன.
இதில் BBM போன்ற செய்திகள் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகை மென்பொருட்கள் அடங்கிய ஒரு folder ருவிற்றர் ஒருங்கிணைப்பு போன்றவற்றையும் கொண்டுள்ளது.
குழந்தைகளின் ஜீரண கோளாறுகளுக்கு ஓமம்:

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும்.
* சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.
* இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது.
* இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.
* பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும்.
* இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
* ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான்.
* ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.
* சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
* உடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
* சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .* நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும்.
* பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.
* சுவாசக்கோளறுகள், இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும். மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது.
முதலில் நம்மை பாதுகாக்கும் முதலுதவிப்பெட்டி: (FIRST AID BOX)

* முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.* முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
* பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.
* அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
* பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.
* பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.

* முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
* அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனதைரியத்தை அளிக்க வேண்டும்.
* பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.
* பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வோரு வீட்டிலும் ஒரு முதலுதவிப்பெட்டி வைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துக்கொள்ளுங்கள்.
பிரகாஷ்ராஸ் இயக்கத்தில் தோனி படத்தில் பிரவுதேவா

பிரகாஷ்ராஜ் இயக்கி, நடித்து வரும் தோனி படத்தில், கெஸ்ட்ரோலில் பிரபுதேவாவும் நடிக்க இருக்கிறாராம். தமிழில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான அபியும் நானும்
படத்தை கன்னடத்தில், "நானு நானா கனசு" என்ற பெயரில் இயக்கியவர் பிரகாஷ்ராஜ்.
அதனைத்தொடர்ந்து பிரகாஷ்ராஜ், இப்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் இயக்கி, நடித்து வரும் படம் "தோனி". படத்தில் பிரகாஷ்ராஜூடன் முக்தா கோஸ் என்ற மும்பை மாடல் அழகி கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இளையராஜா இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், படத்தில் பிரகாஷ்ராஜின் நெருங்கிய நண்பரும், நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா சிறப்பு தோற்றத்தில், ஒருபாட்டுக்கு நடனம் ஆட இருக்கிறாராம்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் பெயரை படத்திற்கு வைத்திருப்பதால், இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டிசம்பர் மாத இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போலி ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ. 30 லட்சம் கொள்ளை: 5 பேர் கும்பல் கைது
சென்னையில் போலி ஏ.டி.எம். அட்டைகளை தயாரித்து, அதன்மூலம் கடந்த ஒரு மாதத்தில் 30 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 5 பேர்
கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.சென்னையி்ல் போலி ஏ.டி.எம். அட்டைகளை தயாரித்து, அதன்மூலம் குறிப்பிட்ட கும்பல் பலரது வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடிப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. சென்னை அண்ணா சாலையில் உள்ள கனரா வங்கியின் கிளை மேலாளரும் கமிஷனர் திரிபாதியை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தார்.
கமிஷனரின் உத்தரவின்பேரில், 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இதுகுறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கோவிலம்பாக்கத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் போலி ஏ.டி.எம். அட்டைகளை தயாரிப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்றுமுன்தினம், அந்த வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான போலி ஏ.டி.எம். அட்டைகளும், கிரெடிட் கார்டுகளும் கைப்பற்றப்பட்டன. இவற்றை தயாரித்த உமேஷ்(27), ராஜேந்திரன்(49), திவ்யன்(24), உதயகுமார்(39), ஜெயக்குமார்(23) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், இந்த 5 பேர் கும்பலுக்கு தலைவராக இலங்கையை சேர்ந்த உமேஷ் செயல்பட்டுள்ளது தெரிந்தது. திவ்யன் மற்றும் ராஜேந்திரனும் இலங்கையை சேர்ந்தவர்கள். கனடாவில் மோசடியில் ஈடுபட்ட உமேஷின் தொல்லை தாங்க முடியாமல், அந்நாட்டு போலீசார் இலங்கைக்கு திரும்ப அனுப்பிவிட்டனர்.
இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த உமேஷ் தன்னோடு ஆட்களை சேர்த்து கொண்டு, பல மோசடி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதற்காக சிறை சென்ற உமேஷ், ஜாமீனில் வெளியே வந்தார். கோவிலம்பாக்கத்தில் மனைவி் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் உமேஷ், சீனாவில் உள்ள சிலரது உதவியால் ஸ்கிம்மர் கருவி ஒன்றை பெற்று கொண்டார்.
சென்னையில் ஆள் நடமாட்டம் மற்றும் காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம். சென்டர்களில் இந்த ஸ்கிம்மர் கருவியை பொருத்திவிடுவர். பின்னர் அதில் பதிவாகும் கார்டுகளின் விபரங்களை வைத்து, போலி கார்டுகளை தயாரித்து, பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
கிடைக்கும் பணத்தில் பங்காளிகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு, தானும் ஜாலியாக காலம் தள்ளி உள்ளார். இந்த கும்பல் கடந்த 1 மாதத்தில் மட்டும் 30 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்து உள்ளதாக தெரிகிறது.
அவர்களிடம் இருந்து போலி கிரெடிட் கார்டுகள் மற்றும் ஏ.டி.எம். அட்டைகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், என்கோடர் உள்ளிட்ட கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
குறிப்பிட்ட பருவத்தில் இல்லற வாழ்வில் நுழையவேண்டும்
என்று அனைத்து மத சாஸ்திரங்களும் தெரிவிக்கின்றன. திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் எனலாம். திருமணம் என்பது இருவர் மனமொத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்கச் செய்வது. இந்த மகிழ்ச்சி என்பது பணமோ, புகழோ , அழகோ, படிப்போ, நல்ல குணமோ, வீரமோ ,காமமோ ஏதோ ஒன்றை அடிப்படையாக கொண்டிருக்கலாம். ஆனால் திருமணம் என்றாலே இன்றைய இளைஞர்கள் மிகவும் யோசிக்கின்றனர்.
திருமணம் செய்து கொண்டவர்களும், "உனக்கு என்னப்பா நீ சுதந்திரப்பறவை, நான் குடும்பஸ்தன்" என்று சலிப்பு வசனம் பேசுகிறார்கள். இளம்பருவத்தினர் இருபாலரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களே இருக்கிறது. அதாவது திருமணத்தை கூடுதல் சுமையாகவும், கவலையாக கருதும் எண்ணம் அவர்களிடம் உள்ளது.
திருமணம் செய்து கொண்டவர்களும், "உனக்கு என்னப்பா நீ சுதந்திரப்பறவை, நான் குடும்பஸ்தன்" என்று சலிப்பு வசனம் பேசுகிறார்கள். இளம்பருவத்தினர் இருபாலரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களே இருக்கிறது. அதாவது திருமணத்தை கூடுதல் சுமையாகவும், கவலையாக கருதும் எண்ணம் அவர்களிடம் உள்ளது. லிவிங்-டுகெதர்
லிவிங-டுகெதர ல் நுழைபவர்கள் 100% இல்லற வாழ்வை ஆயுசுக்கும் அதே நபரோடு தொடர வேண்டும் என்ற ஆவலில்தான் தொடங்குகின்றார்கள்.. விளையாட்டுக்கல்ல. அதுமட்டுமல்ல 50 வயதுக்கு மேலுள்ளவர்கள் , விவாகரத்தானவர்கள் ,துணையை இழந்தவர்கள், பல காரணத்துக்காக மேல்நாட்டில் இணைந்து வாழ்கின்றனர்.. திருமணம் குறித்த ஆய்வுகள் அவ்வப்போது நடக்கும் ஆய்வுகளோ ஒவ்வொருவருக்கும் திருமணம் அவசியம். அதனால் உடல் ரீதியாக பல நன்மைகள் கிடைக்கிறது என்கிறது. இதேபோல் மனோரீதியாகவும் பல நன்மைகள் உண்டு என்கிறது சமீபத்திய ஆய்வு. சர்வதேச நல அமைப்பான ஹூ (WHO) வின் மனநலப் பிரிவு மற்றும் நியூசிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. 15 நாடுகளைச் சேர்ந்த 34 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் வெளியான சில முக்கிய தகவல்கள்-; மன ரீதியான நன்மைகள் திருமணம் செய்து கொள்வதால் மனச்சோர்வு, கவலை மற்றும் மனநல பாதிப்புகள் குறைகிறது. பெண்களைவிட ஆண்கள் திருமணம் செய்வதற்கு விருப்பக் குறைவுடன் இருக்கிறார்கள். அதிக மனச்சோர்வு அடைகிறார்கள். அதே நேரத்தில் திருமணம் செய்து கொண்டபிறகு பெண்களைவிட ஆண்கள் அதிகமான மனச்சோர்வு, கவலைகளில் இருந்து விடுபடுகிறார்கள். டிஸ்ஆர்டர் பாதிப்புகளும் குறைவாக இருக்கிறது. பெண்கள் அதிகம் கல்வி அறிவு பெற்றிருப்பதால் சோர்வு நிலை குறைவாக இருக்கிறது. சிலரிடம் மட்டும் அதிகமிருக்கிறது. தம்பதிகள் பிரிந்து வாழ்வது, யாரேனும் ஒருவர் இறந்துவிடுவது, விவாகரத்து பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. குழந்தைக்காக சார்ந்து வாழ்வதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். புயலும் சீற்றமும் இருக்கும் கடலிலே கப்பலோட்டக்கூடிய மாலுமியே சிறந்தவன்.. இன்றைய இளைய தலைமுறையினரும் இதனை உணர்ந்து கொள்ளவேண்டும். |
பழகலாம் விலகலாம் - பொழுதுபோக்காக நடைபெறும் ஒப்பந்த திருமணம்

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் தற்போது கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது. திருமணம் என்பது ஒரு பொழுதுபோக்காக ஆகிவிட்டது.
தம்பதிகளிடையே அதிக அளவில் விவாகரத்துகள் ஏற்படுகின்றன. அதற்கு ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் காரணமாக கூறப்படுகிறது.
இங்கு இந்த திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இதனால் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை செல்கின்றனர். அதை தடுக்க மெக்சிகோவில் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி திருமணத்தை காண்டிராக்ட் முறையில் செய்து கொள்ளலாம். தொடக்கத்தில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து வாழ 2 ஆண்டுகள் மட்டும் ஒப்பந்தம் அமலில் இருக்கும்.
அதன் பின்னர் அவர்களுக்கு இடையே சுமூகமான உறவு தொடர்ந்தால் ஒப்பந்தம் நீடிக்கப்படும். இல்லாவிட்டால் இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிடலாம். இதன் மூலம் கோர்ட்டுக்கு அலைந்து விவாகரத்து பெறுவது தவிர்க்கப்படும். இந்த சட்டதிருத்தம் இன்னும் ஒரு வாரத்தில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ளது. அதை நிறைவேற்றுவதில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தகைய திருமணத்துக்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சாதாரண கர்ப்பம் என்றால் அலட்டல் இல்லாமல் உறவு வைத்துக்கொள்ளலாம்....???
*கரு உருவான முதல் மூன்று மாதங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முன்பே சொல்லியிருப்பது இதற்கும் பொருந்தும்.
*கரு, கருப்பையில் சரியாகப் பொருந்தியிருக்காது என்பதால் அந்த நேரத்தில் அபார்ஷன் ஏற்பட வாய்ப்புகள் நிறைய. செக்ஸ் வைத்துக் கொள்வ தால்கூட சில சமயங்களில் அபார்ஷன் ஆகலாம். அதனால் முதல் மூன்று மாதங்களில் அந்த உறவு வேண்டாமே.
* அதேபோல், ஒன்பதாவது மாதத்திலும் தாம்பத்ய உறவைத் தவிர்த்துவிடுங்கள். இன்பெக்ஷன்" ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது.
*எந்த பிரச்னையும் இல்லாமல் நார்மலான கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள் என்றால் அதிக அலட்டல் இல்லாமல் உறவு வைத்துக்கொள்ளலாம். *கருப்பையில் கரு தங்காமல் அடிக்கடி அபார்ஷன் ஏற்படும் பெண்கள், கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள பெண்கள் ஆகியோருக்கு இது பொருந்தாது. அப்படிப்பட்ட பெண்கள், பிரசவம் வரையிலுமே தாம்பத்ய உறவைத் தவிர்ப்பது நல்லது.

*மல்லாந்த நிலையில் படுக்கக்கூடாது என்பது சரிதான். ஆனால், அதற்காக கூறப்படும் காரணம்தான் சரியல்ல.
*மல்லாந்த நிலையில் படுத்தால், கனமான கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களை அழுத்தும்.
* இதயத்துக்கு தேவையான ரத்தம் போய்ச் சேராமல் "பி.பி" இறங்கும். அதனால் தலைசுற்றி மயக்கம் வரும். இடது பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்க்கும், சேய்க்கும் நலம்.
ஆண்மைக் குறைவைப் போக்கும் ஜின்ஜெங் வேர்.....
* அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஒரு வேர் விறுவிறுப்பாக விற்பனையாகிறது. அதன் பெயர், ஜின்ஜெங். இது சீனாவில் உற்பத்தியாகிறது.* இந்த வேரை அரைத்துக் குடிக்கிறார்கள். மாத்திரை, கேப்ஸ்யூல் ஆக்கி விழுங்குகிறார்கள், தேநீர், காபியில் கலந்து பருகுகிறார்கள். மதுபானத்தில் சேர்த்துக் குடிக்கிறார்கள். சோப்பிலும் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளிக்கிறார்கள்.

* காரணம், ஜின்செங் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலேரியா, இஸ்மோரியா, தலைவலி, கேன்சர், சாதாரண ஜலதோஷம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது.
* ஜின்செங் செடி 5 ஆயிரம் ஆண்டுகளாக சீனாவில் வளர்க்கப்படுகிறது. 1948-ல் இளம் ரஷ்ய விஞ்ஞானி ஒருவர், ஜின்செங் வேரை ராணுவ வீரர்களுக்குக் கொடுத்துப் பார்த்தார்.
* ஜின்செங் செடி 5 ஆயிரம் ஆண்டுகளாக சீனாவில் வளர்க்கப்படுகிறது. 1948-ல் இளம் ரஷ்ய விஞ்ஞானி ஒருவர், ஜின்செங் வேரை ராணுவ வீரர்களுக்குக் கொடுத்துப் பார்த்தார்.

* உடனே அவர்கள் அதிகமான சுறுசுறுப்பு அடைந்து வேலை செய்தார்கள். அதிலிருந்து ஐரோப்பாவில் ஜின்செங் வேர் பிரபலமாகிவிட்டது. சமீப ஆண்டுகளில் பல கோடி ரூபாய்க்கு ஜின்செங் வேர்களை அமெரிக்கா வாங்கியுள்ளது.
* ஜின்செங்கின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஆராய பல சர்வதேச மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.
* இருந்தாலும் சீன, கொரிய டாக்டர்கள், ஜின்செங் வேரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று இப்போதே அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.
* ஜின்செங்கின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஆராய பல சர்வதேச மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.
* இருந்தாலும் சீன, கொரிய டாக்டர்கள், ஜின்செங் வேரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று இப்போதே அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.
* படிப்புத் திறனையும், நினைவாற்றலையும் ஜின்செங் அதிகப்படுத்தி இருப்பதை அவர்கள் சோதனைகள் மூலம் நிலைநாட்டியிருக்கிறார்கள்.
கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம்
கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் புளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் ஏ விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம் புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள பாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா பெர்ணாண்டஸ் கூறுகையில், இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார்.
இனி குத்துப்பாடல்களிலும் தனது திறமையை காட்டவரும் சமீரா
குத்துப்பாட்டுக்கு என்று ஆடி வந்த கவர்ச்சி நடிகைகள் போய், இப்போது முன்னணி ஹீரோயின்களே இதுபோன்று ஆட துவங்கிவிட்டனர். கவுதம் மேனனின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. தொடர்ந்து அசல், நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழ், தெலுங்கு, இந்தி என்று எல்லா மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். தற்போது லிங்குசாமியின் வேட்டை படத்தில் பிஸியாக இருக்கும் சமீராவுக்கு, குத்துப்பாட்டில் ஆட ஆசை வந்திருக்கிறது.
இதுகுறித்து சமீரா கூறுகையில், சினிமாக்களில் குத்துப்பாட்டு இல்லாத படங்களே கிடையாது என்ற நிலைமை வந்துவிட்டது. காலங்கள் கடந்தாலும் அதற்கான மவுசு எப்போதும் குறைவதில்லை. ஒருபடத்தின் வெற்றிக்கு இதுபோன்ற பாட்டுகளும் அவசியம். சமீபத்தில் இந்தியில் வந்த தபாங் படத்தில் கூட இடம்பெற்ற முன்னி பாடல் செம ஹிட்டானது.
முன்னி மட்டுமல்ல முன்னி பாடல் போல ஏகப்பட்ட பாடல்கள் ஹிட்டாகியுள்ளது. ஆகவே இதுபோன்ற பாடல்களில் எனக்கும் ஆட வேண்டும் என்று ஆசை உள்ளது. அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் ஆடுவேன் என்றார்.

சமீராவின் இந்த தடாலடி ஆஃபரால் பலரும், இப்போதே சமீராவை அணுக தொடங்கியுள்ளனர். அநேகமாக நல்ல ஒரு கலக்கலான குத்துப்பாட்டில் சமீராவை விரைவில் காணலாம்.


















