Wednesday, October 5, 2011

அந்தமாதிரி படங்களின் பட்டியல் என்னிடம் இல்லை - அஞ்சலி



கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, அங்காடித்தெரு மூலம் ஹிட் நாயகியான நடிகை அஞ்சலி
அடுத்தடுத்து படங்களில் சிறிது சிறிதாக கிளாமர் காட்டி நடிக்கத் தொடங்கியிருக்கிறார். பெரிய அளவிலான கிசுகிசுக்கள், வதந்திகள் எதிலும் சிக்காத அஞ்சலி காதல் பற்றி அளித்துள்ள பேட்டியில், காதல் திருமணத்தில் எனக்கு ஆசை இருக்கு. ஆனா அதுக்கு டைம் இல்லை.

எனக்கு பிடிச்ச ஆள் எந்த துறையில் இருந்தாலும், காதலிப்பேன். அவரை பிடிச்சு வந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன். இதில் எந்த தயக்கமும் இல்லை. அந்தக் காதலுக்காகக் காத்திருக்கேன். ஆனால் அதுக்கு இன்னும் நேரம் இருக்கு. கிடைக்க வேண்டிய ஒரு நேஷனல் அவார்டை மிஸ் பண்ணிட்டேன். அதை வாங்கியே ஆகணும்னு தோணுது. அதுக்கான படமும், கேரக்டரும் இப்பபோ என் கையில் இருக்கு. அதில் மட்டும்தான் இப்போ என் கவனமெல்லாம், என்று கூறியுள்ளார்.

கவர்ச்சியான நடிப்பு பற்றி கூறுகையில், எனது நடிப்பில் "மகாராஜான்னு ஒரு படம். ரிலீசுக்கு காத்திட்டு இருக்கு. இதுவரைக்கும் நீங்க பார்க்காத அஞ்சலி அதுல இருக்கா. அழகா கீரிம் ஹேர் வெச்சு, வித விதமா கலர் கலரா மார்டன் டிரெஸ் போட்டு, சாங்ஸ்ல மட்டும் கொஞ்சம் இடுப்பு காட்டி மாறியிருக்கேன். இது நான் விரும்பியதுதான்.



என்னை இந்த இந்த கேரக்டர்களுக்கு மட்டுமே கூப்பிடுங்கன்னு விளம்பரம் கொடுத்து சினிமாவுக்கு வரலை. பிடிச்சு வந்தேன். பிடிச்சு நடிக்கிறேன். நீங்க கவலைப்படுற அளவுக்கு என்னிடம் தப்பான படங்களும் இல்லை, என்று கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment