Saturday, October 8, 2011

மனிதக் கழிவு வாயுவில் இயங்கும் வாகனம்



மனிதக் கழிவு வாயுவில் முற்றிலும் இயங்குகின்ற மோட்டார் சைக்கிள்கள் யப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

 அந்நாட்டின் மலசலகூட உற்பத்திகள் நிறுவனங்களில் ஒன்றான ரோரோவால் இவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. யப்பானில் மலசலகூடங்களில் இருந்து 50 சதவீதமான காபனீரொட்சைட் மாசுகளை 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் 50 சதவீதத்தால் குறைத்தல் என்கிற திட்டத்தின் கீழ் இம்மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. இம்மோட்டார் சைக்கிள்களில் இருக்கை காணப்பட வேண்டிய இடத்தில் மலகூடம் பொருத்தப்பட்டு உள்ளது. பயணங்களை ஆரம்பிக்க முன்னர் மலசலகூடங்களுக்கு இனி மேல் ஓட வேண்டிய தேவை இல்லை. பயணங்களின் இடையில்கூட மல கஷ்டங்களுக்கு உள்ளாக வேண்டியும் இராது.

0 comments:

Post a Comment