பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் சர்வதேச விமான நிலையத்தில் சிறிலங்கா எயார்லைன்ஸ் விமானம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.கடந்த ஒரு கிழமையாக விமானம் தடுக்கப்பட்டுள்ளதால் பிரான்ஸ் நாட்டிற்கு இலங்கை எயார் லைன்ஸ் விமானம் தரையிறங்கமுடியாத நிலையில் உள்ளதுடன் இலங்கையில் இருந்தும் பிரான்ஸ் நாட்டுக்கு விமானம் வரமுடியாத நிலையில் உள்ளதாக அறியமுடிகிறது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து இலங்கை விமானத்தில் இலங்கை வரும் பயணிகள் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வரும் விமானத்தையே பிரான்ஸ் நாட்டில் தரையிறக்கி ஏற்றிவரவேண்டிய நிலையில் இருப்பதாக இலங்கை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.











0 comments:
Post a Comment