தற்போது இவரை சிம்பு நடிக்கும் 'ஒஸ்தி' படத்தில் ஒரு பாட்டிற்கு ஆட வைத்துள்ளார்கள். குளோபல் இந்திய பெண்மணியாக ஜானி டெப், சல்மா ஹெயிக் ஆகியோருடன் நட்பு மனதோடு பழகிய நாட்களை நினைவு கூர்ந்துள்ள மல்லிகா, பாலிவுட், ஹாலிவுட் இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்களையும் கூறியுள்ளார். மணிரத்னத்தின் குரு படத்திற்காக மய்யா மய்யா பாட்டுக்கு நடனம் ஆடினேன். கமல் ஹாசன் நடித்த 'தசாவதாரம்' படத்திற்காக நடித்ததை என்னால் எப்பவும் மறக்க முடியாது. தமிழ் படத்தின் பாடல் காட்சிகள் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. கொலிவுட்டின் பாட்டுக்கும் டான்சுக்கும் நான் தீவிர ரசிகை தபங் படத்தின் தமிழ் ரீமேக்கான 'ஒஸ்தி' படத்தின் சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன்.இந்தி படத்தில் வரும் பாடலை போல இல்லாமல் புது மாதிரியாக அமைத்துள்ளார்கள். இந்த பாடலுக்கு நடனம் அமைக்கும் போது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், பாடல் இசைக்கு தகுந்த மாதிரி இடுப்பை அசைத்து ஆடச்சொன்னார். சிம்பு மாதிரி நல்ல டான்சரோட ஆடியதை நினைத்தால் பெருமையாக இருக்கின்றது. கமல், ரஜினிகாந்த் போன்ற தலைச் சிறந்த கலைஞர்கள் உள்ள தமிழ் திரையுலகில் நானும் இருப்பது எனக்கு பெருமை தரும் விசயமாகும். நான் நடித்த ஹாலிவுட் படமான 'பாலிடிக்ஸ் ஆப் லவ்' படத்திற்கு பரவலான பாராட்டு கிடைத்து வருகிறது. நான் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துள்ளேன். அவர் என்னையும் சினிமா உலகையும் பாராட்டி, உற்சாகப்படுத்தியுள்ளார். நான் நடித்த ஹாலிவுட் படத்தை பார்க்க அவர் ஆர்வம் காட்டுவார் என நினைக்கிறேன் என்று மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளாராம். |
0 comments:
Post a Comment