Saturday, October 1, 2011

அதிகாரிகள் யார் லஞ்சம் வாங்கினாலும் அவர்களை விடமாட்டேன்

சிலர் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என கூறுகிறார்கள். மக்கள் நினைத்தால் தமிழகத்தில் யாரும் நிரந்தர முதல்வராக இருக்க முடியாது
என விஜயகாந்த் கூறியுள்ளார்.கும்பகோணம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கோமதி சிவா மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த் இன்று பகல் கும்பகோணம் மகாமக குளக்கரையில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் உங்களுடைய வாக்குகளை இருகட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்தது போதும். ஒருமுறையாவது மாற்றித்தான் பாருங்கள்.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு ஞாபக மறதி அதிகமாகவிட்டது என்று கூறியதாக இன்றைய நாளிதழ்களில் செய்தி வந்து உள்ளது. ஒரு மூத்த அரசியல்வாதிக்கு இப்படி ஞாபக மறதி வரலாமா?
மக்களாகிய நீங்கள் தான் அவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். அதனால் தான் இதுபோன்ற அரசியல்வாதிகள் எல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தேமுதிகவுக்கு நேற்று ஒரு எம்.எல்.ஏ, இன்று 29 எம்.எல்.ஏ. நாளை நாட்டை ஆளுவோம். ஒருசிலர் நிரந்தர முதல்வர் என்று சொல்கிறார்கள். மக்கள் நினைத்தால் யாரும் நிரந்தரம் கிடையாது.
நான் நடிகராக இருந்து கொண்டு தையல் மிஷின், உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். என்னிடம் ஆட்சியை கொடுத்தால் நான் மேலும் உதவிகளை செய்யமாட்டேனா?
அதிகாரிகள் யார் லஞ்சம் வாங்கினாலும் அவர்களை விடமாட்டேன். எனது கட்சிக்காரர்களாக இருந்தாலும் அவர்களையும் லஞ்சம் வாங்கினால் விடமாட்டேன்.


0 comments:

Post a Comment