Wednesday, October 5, 2011

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் முதலில் அலரிமாளிகைக்கு அனுப்பிவைப்பு! விக்கிலீக்ஸ்!!

கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் முதலில் அலரிமாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
தேர்தல் செயலகத்திற்கு உத்தியோகபூர்வ முடிவுகளை அனுப்பி வைப்பதற்கு முன்னர் அலரிமாளிகைக்குத் தகவல்களை வழங்குமாறு எட்டு அரசாங்க அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

அம்பாறை, அனுராதபுரம், பொலநறுவை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட அரச அதிபர்களுக்கு இப்பணிப்புரை விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்னீஸினால் இந்தத் தகவல் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் போதியளவு ஆதரவு காணப்படவில்லை என புட்னீஸ் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment