Friday, October 7, 2011

அரசியல் தீர்வினை முஸ்லிம் மக்களும் ஏற்க வேண்டும்! சம்பந்தன்!!


இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஏற்படும் போது முஸ்லீம் மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அது அமைய வேண்டும்
இரா. சம்பந்தன் வெளியிட்ட அறிக்கை வருமாறு, 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – இலங்கைத் தமிழரசுக்கட்சி கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றது.

ஆனாலும் இப்பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் பலம் எமக்கு இல்லாமல் இருப்பினும் பிரதேச மக்களின் நலன்களுக்காக பயன் தரமிக்க பங்களிப்பை வழங்கமுடியும் என்பதை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் எமக்கு இருக்கின்றது என்பதைத் தேர்தல் மூலம் தெரியப்படுத்தலாம்.

மேலும் தமிழ்வாக்காளர்கள் ஒன்றுபட்டு நின்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு- இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கொள்கைகளை ஒருமனதாக ஆதரிக்கின்றோம் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டும்.

யுத்தம் மற்றும் பேரழிவிற்குப் பின்னர் தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றைக்காண வேண்டும் என்ற தேவை பொருத்தமான இடங்களில் வழமைக்கு மாறான முக்கியத்வத்துடன் உருவாகியுள்ளது.

நாட்டின் எதிர்கால நலன் குறித்த ஏனைய முக்கிய பிரச்சினைகள் தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு காணுவதுடன் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.

ஜனநாயகம், அடிப்படை மனித உரிமைகள், அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் தான் இவற்றை அடையலாம்.

தமிழ் மக்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும்போது மேற்கூறப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் தங்கள் வாக்குகளை அளிக்கும்போதுதான் தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதான தீர்வைக் காணக்கூடியதாக இருக்க முடியும்.

அத்துடன் அவர்களுக்கு சமமான பிரசைகள் என்ற அந்தஸ்தை வழங்குவதாகவும் அதுஅமையும்.

தேசியப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை உருவாக்குமுகமாக அரசாங்கம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது.

தமிழ் மக்கள் பாராளுமன்றத் தேர்தலிலும் உள்ளுராட்சித் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் தமிழத்தேசியக் கூட்டமைப்புக்கு பலமான ஆதரவை நல்கியதுடன் தங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை பேச்சுவார்த்தை மூலம் காணும்படி தெளிவான ஜனநாயக ஆணையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியுமுள்ளனர்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இப்பணியை செய்து முடிக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அந்த நீண்ட அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment