குத்துப்பாட்டுக்கு என்று ஆடி வந்த கவர்ச்சி நடிகைகள் போய், இப்போது முன்னணி ஹீரோயின்களே இதுபோன்று ஆட துவங்கிவிட்டனர். கவுதம் மேனனின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. தொடர்ந்து அசல், நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழ், தெலுங்கு, இந்தி என்று எல்லா மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். தற்போது லிங்குசாமியின் வேட்டை படத்தில் பிஸியாக இருக்கும் சமீராவுக்கு, குத்துப்பாட்டில் ஆட ஆசை வந்திருக்கிறது.
இதுகுறித்து சமீரா கூறுகையில், சினிமாக்களில் குத்துப்பாட்டு இல்லாத படங்களே கிடையாது என்ற நிலைமை வந்துவிட்டது. காலங்கள் கடந்தாலும் அதற்கான மவுசு எப்போதும் குறைவதில்லை. ஒருபடத்தின் வெற்றிக்கு இதுபோன்ற பாட்டுகளும் அவசியம். சமீபத்தில் இந்தியில் வந்த தபாங் படத்தில் கூட இடம்பெற்ற முன்னி பாடல் செம ஹிட்டானது.
முன்னி மட்டுமல்ல முன்னி பாடல் போல ஏகப்பட்ட பாடல்கள் ஹிட்டாகியுள்ளது. ஆகவே இதுபோன்ற பாடல்களில் எனக்கும் ஆட வேண்டும் என்று ஆசை உள்ளது. அதற்கான சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் ஆடுவேன் என்றார்.

சமீராவின் இந்த தடாலடி ஆஃபரால் பலரும், இப்போதே சமீராவை அணுக தொடங்கியுள்ளனர். அநேகமாக நல்ல ஒரு கலக்கலான குத்துப்பாட்டில் சமீராவை விரைவில் காணலாம்.











0 comments:
Post a Comment