Thursday, October 20, 2011

சிங்கில் பாட்டிற்கு ஆட்டம் போட்ட விதார்த்

மைனா படத்தின் மூலம் வெற்றிநாயகன் ஆன நடிகர் விதார்த், குருசாமி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடுகிறார்.பொதுவாக நடிகைகள்தான்
 இதுபோன்று ஓரு பாடலுக்கு மட்டும் ஆட்டம் போடுவார்கள். ஐய்யப்பசாமியின் மகிமைகளை சித்தரிக்கும் புதிய படம் குருசாமி.இந்தபடத்தில்,பாய்ஸ் மணிகண்டன், உதயதாரா, பருத்தி வீரன் சரவணன், டெல்லிகணேஷ், சங்கர் கணேஷ், வீரமணிதாசன், வடிவுக்கரசி, தனம் பிரேம்குமார், சூரி, விஜயகணேஷ், சிசர் மனோகர், நெல்லை சிவா, போண்டாமணி உள்பட 27 நடிகர் - நடிகைகள் நடித்துள்ளனர்.படத்தில் இடம்பெறும் முக்கியமான பாடல் ஒன்றில் ஆடுவதற்காக மைனா விதார்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் டைரக்டர். மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் தனது பணியை சிறப்பாக செய்து கொடுத்தாராம் விதார்த்.படத்திற்கு கே.ஜி.சீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, வசந்தமணி இசையமைத்துள்ளார். கதை- திரைக்கதை- வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஆர்.விஷ்ராந்த். சேனல் பைவ் புரொடக்ஷன் சார்பில் துளசி மாறன் தயாரிக்கிறார். சென்னை, புதுச்சேரி, ஆவுடையார் கோவில், இரும்பநாடு, திருச்செந்தூர், எரிமேலி, பம்பா, மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment