Wednesday, October 5, 2011

அமெரிக்க அழைப்பாணையை ஏற்றுக்கொள்ள முடியாது : அரசாங்கம் மறுப்பு!!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை ஏற்றுக்கொள்ள முடியாது
என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஹேக் சர்விஸ் என்னும் பிரகடனத்தி;ன் அடிபப்டையில் அரச தலைவர்களுக்கு எதிராக இவ்வாறு அழைப்பாணை பிறப்பிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் நீதி அமைச்சு, அமெரிக்க நீதிமன்றத்திற்கு இந்த பதிலை வழங்கியுள்ளது.
விடுதலைப் புலிகளின் கிழக்குத் தளபதி ரமேஸின் மனைவியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இலங்கையை அடிப்படையாகக் கொண்டது எனவும், இதனால் அமெரிக்காவில் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக விசாரணை நடத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராக அழைப்பாணை பிறப்பிக்கும் நடவடிக்கை நாட்டின் இறைமையை பாதிக்கக் கூடியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment