
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் தற்போது கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது. திருமணம் என்பது ஒரு பொழுதுபோக்காக ஆகிவிட்டது.
தம்பதிகளிடையே அதிக அளவில் விவாகரத்துகள் ஏற்படுகின்றன. அதற்கு ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் காரணமாக கூறப்படுகிறது.
இங்கு இந்த திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இதனால் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை செல்கின்றனர். அதை தடுக்க மெக்சிகோவில் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி திருமணத்தை காண்டிராக்ட் முறையில் செய்து கொள்ளலாம். தொடக்கத்தில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து வாழ 2 ஆண்டுகள் மட்டும் ஒப்பந்தம் அமலில் இருக்கும்.
அதன் பின்னர் அவர்களுக்கு இடையே சுமூகமான உறவு தொடர்ந்தால் ஒப்பந்தம் நீடிக்கப்படும். இல்லாவிட்டால் இருவரும் பரஸ்பரம் பிரிந்துவிடலாம். இதன் மூலம் கோர்ட்டுக்கு அலைந்து விவாகரத்து பெறுவது தவிர்க்கப்படும். இந்த சட்டதிருத்தம் இன்னும் ஒரு வாரத்தில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட உள்ளது. அதை நிறைவேற்றுவதில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தகைய திருமணத்துக்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.











0 comments:
Post a Comment