யாழ்.நகர முதல்வர் திருமதி யோகேஸ்வரியின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைத்துப்பாக்கியுடன் யாழ்.பொது நூலகத்திற்குள் நுழைந்து அட்டகாசம் புரிந்துள்ளார்.
பொலிஸாரை ஆயுதங்களுடன் உள்செல்ல அனுமதியில்லை என நூலக பாதுகாப்பு பிரிவினர் சொல்ல “நான் யார் தெரியுமா? மேயரின் பாதுகாப்பு பொலிஸ், என்னை ஆயுதத்துடன் உள்ளே விடா விட்டால் அம்மாவை யாரும் என்னவும் செய்வாங்க” என அதிகாரத்தெனியில் அதட்டியுள்ளார்.
இன்று புதன்கிழமை யாழ். பொது நூலகத்தில் 'இலங்கைக்கு மீள் திரும்புதல்' எனும் தலைப்பினாலான பிரிட்டிஸ் தூதுவராலயத்தின் கண்காட்சி ஒன்று ஆரம்பமாகியது.
இந் நிகழ்விற்கு அதிதியாக அழைக்கப்பட்ட யாழ்.மாநகர முதல்வருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகவே குறித்த பொலிஸார் வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான இடங்களில் சீருடை அணிந்தவர்கள் உட்செல்லும் போது ஆயுதங்களைக் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும். இந்நிலையில் குறித்த பொலிஸார் தனது கைத்துப்பாக்கியுடன் சென்று கண்காட்சியைக் கண்டு களித்துள்ளதுடன் கைத்துப்பாக்கியை
கையில் எடுத்து துடைத்துக் கொண்டும் அவர் படம் காட்டியுள்ளார்.
யாழ்.நகரின் ஆட்சி அதிகாரம் அம்மாவிடம் இருப்பதினால் எதுவும் செய்யமுடியாத நிலை இருப்பதாக யாழ்.நூலகத்தில் கடமையாற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ். பொது நூலகத்தில் ஆயுதங்கள்,கைக்குண்டுகள் மற்றும் புகைப்படக் கருவிகள், ஒளிப்படக் கருவிகள் மற்றும் கைத் தொலைபேசிகள் என்பன பாவனை செய்வதற்கு நூலக நிர்வாகத்தினால் தடை வித்திக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ளவர்கள் தாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அன்றி ஆயுதத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் எனத் தான்தோன்றித்தனமாக நினைப்பது முட்டாள்தனம் ஆகும்.
எனவே இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளைத் தேர்தல் காலத்தில் மக்கள் நினைவுகூர்ந்து கவனிப்பார்கள் என்பது நிறுத்திட்டமான உண்மை.











0 comments:
Post a Comment