Sunday, October 2, 2011

ரைட்டானிக் கப்பலை நினைவுட்டும் மற்றுமொரு பொருள் ஏலம் போகிறது


ரைட்டானிக் கப்பலில் பயணித்து உயிர்தப்பிய ஒருவர் தனது குடும்பத்தினருக்கு ஒரு குறிப்பொன்றைத் Fax மூலம் அனுப்பியிருந்தார்.
அது 1912 ஏப்ரல் 18 இல் Carpathia மீட்புக் கப்பலிலிருந்து ரைட்டானிக் மூழ்கி 4 நாட்களின் பின்னர் அனுப்பப்பட்டிருந்தது.
நியூஜேர்சியைச் சேர்ந்த வில்லியம் மான்ஸ்பீல்ட் என்பவருற்குப் பென்சிலால் எழுதப்பட்ட இந்தத் தந்தி அனுப்பப்பட்டிருந்தது.

காலத்தால் மங்கிப்போய் மஞ்சளாகியிருந்த இந்தத் தந்தி 2500 பவுண்களாக ஆரம்பத்தில் ஏலம் விடப்பட்டுள்ளது.

1912 ஏப்ரல் 14-15 இல் வெள்ளைநிற ஆடம்பரக் கப்பலான ரைட்டானிக் இங்கிலாந்தை விட்டு நியூயோர்க்கிற்கான தனது கன்னிப்பயணத்தினை ஆரம்பித்திருந்தது.

மூழ்கமுடியாதென்று கருதப்பட்ட இக்கப்பல் ஒரு பனிப்பாறையில் மோதி நியூபவுண்ட்லான்ட் பகுதியில் மூழ்கியது.

ரைட்டானிக் மூழ்கிய போது முதன்முதலில் அதனது ஆபத்துச் சமிக்கையைப் பெற்ற ஒரேயொரு கப்பலாக Carpathia தான் இருந்தது.

இதுதான் ரைட்டானிக்கின் பெரும்பாலான பயணிகளைக் காப்பாற்றிய பெருமையையும் பெற்றிருந்தது.

0 comments:

Post a Comment