
முதன்முதலாகவும் முற்றுமுழுதாகவும் யாழ்ப்பாண மண்ணில் தயாரிக்கப்பட்டு மிக விரைவில் வெளியிடப்படவிருக்கின்றது தேவி பிக்சர்ஸின் முகப்பு புத்தக காதல் எனும் குறும்படம்.
கோலிவுட் வடிவில் உருவாகி, தற்கால சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தின் கலாசாரப் பிறழ்வு, அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் மற்றும் வறுமையில் வாடிப் பின் வளர்வது என்பது தொடர்பில் எடுத்துரைக்கும் ஒரு துல்லியமான குறும்படம் இது.
இத் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர்கள், யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளிடையே ஏற்பட்டுள்ள முகப்பு புத்தகத்தின் (face book) ஆக்கிரமிப்பு, இதனால் ஏற்பட்ட காதல் என்பதை எடுத்துக் கூறி அதனைத் தவிர்க்குமாறும் எடுத்துரைக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் ''கதை வறுமையில் வாழும் சிறுவன் பெரியவனாகும் போது எப்படி இருப்பான்?'' என்பதே.
அத்துடன் ஏழ்மையில் வாடி, ஒருநேர உணவுக்காகக் கையேந்தும் சிறுவர்களின் வாழ்வாதார வளர்ச்சியை உயாத்த எம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும் என்பது தொடர்பிலும் இக் குறும்படம் எடுத்துக் காட்டி நிற்கின்றது.
எனவே இக் குறும்படம் மூலம் வசதி படைத்த மக்களுக்கு ஒரு உண்மையான, யாழ்ப்பாண மண்ணின் தற்கால நிலைமையியை எடுத்துக் கூறும் ஒரு குறும்படமாகவும் இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தின் இசை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு றாகுல் தயாரிப்பில் மற்றும் இந்ததிரைப்படத்தில் நடிப்பவர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக நடிப்பை வெளிக்காட்டுகின்றனர். நடிகர்களின் பெயர்கள் கபில், நிவே, பிரதீப், றெக்கி, டிபியா, வேபிசபி.











0 comments:
Post a Comment