
பிரகாஷ்ராஜ் இயக்கி, நடித்து வரும் தோனி படத்தில், கெஸ்ட்ரோலில் பிரபுதேவாவும் நடிக்க இருக்கிறாராம். தமிழில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான அபியும் நானும்
படத்தை கன்னடத்தில், "நானு நானா கனசு" என்ற பெயரில் இயக்கியவர் பிரகாஷ்ராஜ்.
அதனைத்தொடர்ந்து பிரகாஷ்ராஜ், இப்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் இயக்கி, நடித்து வரும் படம் "தோனி". படத்தில் பிரகாஷ்ராஜூடன் முக்தா கோஸ் என்ற மும்பை மாடல் அழகி கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இளையராஜா இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், படத்தில் பிரகாஷ்ராஜின் நெருங்கிய நண்பரும், நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா சிறப்பு தோற்றத்தில், ஒருபாட்டுக்கு நடனம் ஆட இருக்கிறாராம்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் பெயரை படத்திற்கு வைத்திருப்பதால், இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டிசம்பர் மாத இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.











0 comments:
Post a Comment