Tuesday, May 29, 2012

மாணவர்களுக்கு சேதி சொல்லும் 'படிக்கிற வயசுல' படம்...

படிக்கிற வயசுல” படம் மாணவர்களை நல்வழிப்படுத்தி பொறுப்புள்ள குடிமகன்களாக மாற்றும் என்று உறுதியாக ராஜேஷ் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு சேதி சொல்லும் படத்தை எடுத்துள்ளது 'படிக்கிற வயசுல' படக்குழு
இதில் நாயகனாக ராஜேஸ்குமார், நாயகியாக ராகி இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.

பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவ-மாணவி இருவரும் காதலில் 'திடீரென' விழுந்தால் என்னவாகும் என்பதை படமாக எடுத்துள்ளார்கள்.
'இந்தப்படத்தின் மூலமாக மாணவ சமுதாயத்துக்கு அழுத்தமான சேதியை சொல்லியிருக்கிறோம். மாணவ பருவத்தில் படிப்பின் மேல் ஆர்வத்தைக் காட்டாமல், காதலில் கவிழ்வதால் மாணவக் கண்மணிகளின் பொன்னான நேரம் வீணாகிறது.
இப்படம் மாணவர்களை நல்வழிப்படுத்தி பொறுப்புள்ள குடிமகன்களாக மாற்றும் என்று உறுதியாக ராஜேஷ் கூறியுள்ளார்

அஜீத்தின் புகழ் பாடும் ஆர்யா...

அஜீத் குமார் புகழ் பாடும் நடிகர்கள் பட்டியிலில் புதிதாக இணைந்திருப்பவர் ஆர்யா
அஜீத் குமாரை வைத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் எடுக்கும் படத்தில் ஆர்யாவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க ஆர்யா ஓவர் ஆர்வமாக உள்ளார்.

விஷ்ணுவர்தன் எனக்கு நல்ல நண்பர். அவர் கேட்டால் நான் அவருக்காக துணை நடிகராகக் கூட நடிக்க தயங்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

Monday, May 28, 2012

9 மொழிகளில் உருவாகும் இயேசு கிறிஸ்து 3டி படம்...

படவிழாவிற்கு பாய்பிரண்டுடன் வந்தார் ஸ்ரேயா...

கடந்த சில காலமாக பல நடிகர்களுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்ட ஸ்ரேயா, யாருடனும் காதல் இல்லை என கூறி வந்தார்.
இந்நிலையில் அவரது நிஜ காதலருடன் பட விழாவுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீபா மேத்தாவின் மிட்நைட்ஸ் சில்ரன் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா.

தன் மீதான தாக்குதலுக்கு உதவிய பெண்ணை மன்னிக்கத் தயார் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்...


கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணை ஒன்றில் நேரில் ஆஜராகிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மன்னார் ஆயருக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்...


ஆயர் இராயப்பு ஜோசப்பின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரியும், அவர் மீதான அச்சுறுத்தல்களுக்கு கண்டித்தும் மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் கண்ட ஒன்றுகூடலொன்று நேற்று இடம்பெற்றிருந்தது.
சிறிலங்காவிலும் தமிழர் தாயகத்திலும் இராணுவ மேலாதிக்க ஆட்சி அதிகாரத்தின் கீழ், சுதந்திரமாக கருத்துக்களை கூறுவதற்கும் உண்மைகளினை வெளிப்படுத்துவதற்கும் அரசியல் அபிலாசைகளை கொண்டிழுப்பதற்கும் அரசியல் அகற்றப்பட்டுள்ள இன்றைய சூழலில், மன்னாரில் முன்னெடுக்கப்பட்டும் சாத்தவீக வழிப்போராட்டங்களுக்கு உலகெங்கும் சிதறிவாழும் தமிழர்கள் யாவரும் தங்கள் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றனர் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்தார்.
சிறிலங்காவிலும் தமிழர் தாயகத்திலும் இராணுவ மேலாதிக்க ஆட்சி அதிகாரத்தின் கீழ், சுதந்திரமாக கருத்துக்களை கூறுவதற்கும், உண்மைகளினை வெளிப்படுத்துவதற்கும், அரசியல் அபிலாசைகளை கொண்டிழுப்பதற்கும் அரசியல் அகற்றப்பட்டுள்ள இன்றைய சூழலில் மன்னாரில் முன்னெடுக்கப்பட்டும் சாத்தவீக வழிப்போராட்டங்களுக்கு, உலகெங்கும் சிதறிவாழும் தமிழர்கள் யாவரும் தங்கள் ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
தமிழர் தாயகத்தினுள்ளும் சிறிலங்காவிலும் இந்து, இஸ்லாமிய மத சுதந்திரத்துக்கும் வழிபாட்டு உரிமைக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சிங்கள பௌத்த இனவாதிகளின் செயல்களுக்கு எதிராக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், எமது புதிய போர்களம், தமிழர் வாழும் தேசங்கள் என்ற அடிப்படையில் உலகலாவிய ரீதியில் விழிப்புணர்வுப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.





காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்: மனமுடைந்த யுவதி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி: யாழில் சம்பவம்...

Sunday, May 27, 2012

வலியின்றி ஊசி போடும் நவீன கருவி கண்டுபிடிப்​பு...

இஷ்டம் படம் பற்றி 2ம் கதாநாயகன் அனுப்பின் பேட்டி...





துணை நடிகையை விலைமாதுவாக சித்தரித்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டது மர்மகும்பல்...

கே.வி.ஆனந்தின் “கோ” படத்தில் பெண் நக்சலைட் தீவிரவாதியாக காஜல் என்ற தமிழ்ச் செல்வி நடித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து திரையுலகிற்கு வந்தவர் நடிகை காஜல்.

எழுத்தாளராக நடிக்கும் பூனம் கவுர்...

கொலிவுட்டில் 'வதம்' படத்தை இயக்குனர் மதிவாணன் இயக்கியுள்ளார்.


இந்த த்ரில்லர் படத்தில் பூனம் கவுர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.


இப்படம் குறித்து இயக்குனர் மதிவாணன், வதம் படத்தில் நாயகன் என்று யாரும் கிடையாது. பூனம் வலுவான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.


எழுத்தார்வம் மிக்க இளம் பெண்ணாக அவர் வருகிறார். எந்த சூழ்நிலையிலும் ஒரு பெண்ணால் உறுதியாக நின்று எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இப்படத்தில் இருப்பார்.


சமீபத்தில் கொடைக்கானலில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். அபு ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.


படத்தில் இயக்குனர் வெங்கடேஷ், ஜான் விஜய், மகேந்திரன், பாய்ஸ் மணிகண்டன், எம்.எஸ்.பாஸ்கர், பேபி வர்ஷா மற்றும் பலர் நடித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.


   

அரவான் அர்ச்சனாவுக்கு திருமணம்...

அரவான் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த அர்ச்சனாவுக்கு திருமணம் நடந்ததாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
கொலிவுட்டில் வசந்தபாலன் இயக்கத்தில் அரவான் படத்தில் ஆதி, தன்ஷிகாவுடன் அர்ச்சனா கவி நடித்துள்ளார்.