Sunday, May 20, 2012

நான் நோயாளிகளை குணமாக்குவது போல் நீங்கள் குணமாக்குவீர்களா? எதிரிகளுக்கு நித்தியானந்தா சவால்...



நோயாளிகளை குணமாக்கும் சக்தி எனக்கு உள்ளது. இதே போல் மற்றவர்கள் செய்ய முடியுமா என்று நித்தியானந்தா சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நித்தியானந்தா கூறுகையில், மதுரை ஆதீன மடம், நித்தியானந்த பீடத்தின் சொத்து விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வெளியிடத் தயாராக உள்ளோம்.
இதேபோன்று மற்ற ஆதீனங்களும் தங்களின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டிருந்தேன்.
இதுவரை அவர்கள் பதிலளிக்கவில்லை. அதேபோன்று எங்களின் செலவுக் கணக்குகளை திறந்த புத்தகமாக வைத்துள்ளோம். எங்களின் செயற்பாடுகளும் வெளிப்படையாகவே உள்ளன.
இதேபோன்று மற்ற ஆதீனங்களும் தங்களின் வரவு- செலவு கணக்குகளை பகிரங்கமாக வெளியிடத் தயாரா என்று மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
நோயாளிகளை குணமாக்கும் ஆன்மீக சக்தி எனக்கு உள்ளது. பல நோய்களை நான் குணமடையச் செய்து வருகிறேன்.
இதேபோல் மற்ற சுவாமிகள் செய்ய முடியுமா என்றும் சவால் விடுத்துள்ளார்.


         

0 comments:

Post a Comment