Monday, May 28, 2012

காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்: மனமுடைந்த யுவதி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி: யாழில் சம்பவம்...

யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர், தற்கொலை செய்து கொள்ள முயன்று தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்திசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
23 வயதுடைய குறித்த யுவதி நீண்ட நாட்களாக இளைஞர் ஒருவரை காதலித்ததாகவும் அவ் இளைஞர் வேறு ஒரு பெண்ணை திடீரென திருமணம் செய்ததினால் மனமுடைந்த யுவதி மண்ணெண்னை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment