மனிதத்திற்கு எதிரானதென்று சர்வதேச மட்டத்தில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள்(Chemical weopens-biological weapons) மற்றும் கிளஸ்டர் குண்டுகள் என்று அழைக்கப்படுகின்ற கொத்தணிக்குண்டுகள் (Cluster bombs- Cluster munition) போன்றனவற்றை விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தங்களின் பொழுது சிறிலங்காப் படைகள் பாவித்ததற்கான ஆதாரங்கள் சர்வதேச அமைப்புக்கள், உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் தற்பொழுது எழ ஆரம்பித்துள்ளன.
வன்னியில் கிளஸ்டர் குண்டுகள்; பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கியநாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் அலென் பொஸ்டன் சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியிட்டிருந்தார்.
காலத்தின் தேவை இந்த தடைசெய்யப்பட்ட ஆயுத விடயம் சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்லப்படுவதற்கு சில முக்கிய தரப்புக்கள் தடையாக இருக்கின்றதோ என்கின்றதான சந்தேகம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
1000 இரசாயனக் குண்டுகளை 2001ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் திகதி சிறிலங்கா தனியானதொரு விமானம் மூலமாக இலங்கைக்குக் கொண்டு வந்திருந்து என்பதை, அந்தத் தென்இலங்கை ஆங்கில ஊடகம் ஆதாரங்களுடன் நிரூபித்திருந்தது.
தாம் கொள்வனவுசெய்தது இரசாயன ஆயுதமல்ல. அதிக சேதத்தை விளைவிக்கக் கூடியதான இரசாயனம் சிறிதளவு கலக்கப்பட்ட ஆயுதம் மட்டுமே அது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லயனல் பல்லேகல்ல ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் வேறு வழியில்லாமல் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இந்த இரசாயன ஆயுதங்களை கொள்வனவு செய்து சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கிய Gladstone Industrial Holdings என்ற நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான முன்னாள் சிறிலங்கா இராணுவ அதிகாரி லெப். கேணல் உபாலி கஜநாயக்க (Lt. Col. Upali Gajanayake) சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிற்கு கருத்துக்கூறும் பொழுது, ‘சிறிலங்கா இராணுவம் கொள்வனவு செய்தது இரசாயன ஆயுதமே’ என்று உறுதிப்படுத்தியிருந்தார்.
யுத்தமுனைகளில் சர்வதேச நியதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றதா என்று கண்காணித்துக்கொண்டிருக்கும் ஐ.நா. தொண்டர் அமைப்பு பணியாளர்கள் வன்னியில் பிரசன்னமாகி உள்ள நிலையில் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பாவித்தால், அது விடுதலைப் புலிகளின் போராட்டத்தை சர்வதேச சமூகம் முற்றாகவே தடைசெய்வதற்கு ஏதுவானதாக அடைந்துவிடும். இது சிறிலங்காவிற்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்த நிலையிலும், வன்னியில் இருந்து சர்வதேச தொண்டர் அமைப்புப் பணியாளர்களை பலவந்தமாக வன்னியில் இருந்து சிறிலங்கா அரசு வெளியேற்றியதானது, சிறிலங்கா அரசு தொடர்பான பலமானதொரு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து புதுமாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்கால் போன்ற பாதுகாப்பு வலயப் பகுதிகளில் தங்கியிருந்த மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் நிற்பதாகக் கூறிக்கொண்டும், அந்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தொகையை மிக மிகக் குறைவாக வெளியிட்டும் அந்தப் பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களைப் பாவித்துத் தான் மேற்கொள்ள இருந்த மிக மோசமான ஒரு இன அழிப்பு நடவடிக்கைக்கு தளம் அமைத்திருந்தது சிறிலங்கா அரசாங்கம். தான் நினைத்ததை இறுதியில் செய்தும் முடித்திருந்தது.
இப்படியான பின்னணியில்தான் இந்தத் தடைசெய்யப்பட்ட ஆயுத விவகாரம் தற்பொழுது மீண்டும் வெளிக்கிளம்ப ஆரம்பித்துள்ளது.
இப்படியான பின்னணியில்தான் இந்தத் தடைசெய்யப்பட்ட ஆயுத விவகாரம் தற்பொழுது மீண்டும் வெளிக்கிளம்ப ஆரம்பித்துள்ளது.
















0 comments:
Post a Comment