Sunday, May 20, 2012

ஆல்ப்ஸ் மலையில் மிகப்பெரிய நிலச்சரிவு...


சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள பாறைகள் சரிந்து பள்ளத்தாக்கில் விழுந்தன. மிகப்பெரிய இந்த நிலச்சரிவு கடந்த வாரம் வேலேஜியன் மலைப்பகுதியில் நிகழ்ந்தது.ஆல்ப்ஸ் மலையில் பிரியோன்ஸோவுக்கு அருகில் நடந்த இந்த நிலச்சரிவில் 30,000 கன மீட்டர் அளவிற்கு பாறைகள் சரிந்துள்ளன.பாறைகள் சரிந்து விழுந்த மலைப்பிளவுக்கு அருகில் மலையடிவாரத்திலிருந்த பள்ளிக்கூடமும், கடைகளும் மூடப்பட்டன. ஒருவர் மட்டும் இந்த மலைச்சரிவில் காயம்பட்டதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.வறண்ட வானிலையே நிலவும் என்று இதுவரை கூறிவந்த நிலவியல் அறிஞர்கள் இனி மழை பெய்யக்கூடும் என்று இன்று தெரிவித்தனர். மழை பெய்தால் மேலும் நிலச்சரிவு ஏற்படும் என்பதால் இந்த மலையின் மீது பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.























0 comments:

Post a Comment