Sunday, May 20, 2012

தந்தை குடிக்க பணம் தராததால் வாலிபர் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி...

டாஸ்மார்க் செல்வதற்கு தந்தை பணம் தரவில்லை என்பதால் வாலிபர் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்துகொண்டார்.


திருக்கோவிலூரை அடுத்த அந்திலி கிராமத்தைச் சேர்ந்த சக்தி வேல்(வயது 30), நேற்று மின்கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.
அச்சமயம் மின்கம்பத்தில் மின்சாரம் இல்லை என்பதால் அங்கேயே தூக்கிலிட்டு தற்கொலை செய்யவும் முயற்சி செய்தார்.
இத்தகவல் பொலிஸாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் மின்கம்பத்தில் ஏறி சக்தி வேலை மீட்டனர்.
அவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், தனது தந்தை குடிப்பதற்கு பணம் தரவில்லை. அதனால் தற்கொலைக்கு முயன்றேன் என்று தெரிவித்தார்


   

0 comments:

Post a Comment