பல நாட்கள் வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து பேசிய அந்த வாலிபரின் தொல்லையால் மன வேதனையடைந்த கல்லூரி மாணவி தனது பெற்றோரிடமும் சகோதரரிடமும் கூறினார். ஒரு நாள் அந்த வாலிபர் பேசும் போது செல்போனை கல்லூரி மாணவி தனது பெற்றோரிடம் கொடுத்தார்.
அப்போது அந்த வாலிபர் கல்லூரி மாணவியின் பெற்றோரை அசிங்கமாக திட்டி விட்டு தொடர்பை துண்டித்து விட்டார். கல்லூரி மாணவி பேசும் போது மட்டும் அவரிடம் தொடர்ந்து கொஞ்சி பேசி வந்தார். இதைத் தொடர்ந்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கல்லூரி மாணவிக்கு செல்போனில் தொல்லை கொடுத்து வந்த அந்த வாலிபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் புதன்கிழமை கல்லூரி மாணவிக்கு செல்போனில் அந்த வாலிபர் மீண்டும் பேசினார். நேற்று செக்ஸ் படம் பார்த்ததாக கூறி பேச்சை தொடங்கிய அவர் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசினார். இதைத் தொடர்ந்து மாணவி செல்போனை தனது சகோதரரிடம் கொடுத்தார். சகோதரர் பேசும் போது அவரிடமும் அசிங்கமான முறையில் அந்த வாலிபர் பேசினார்.
இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் தகவலை சைபர் கிரைம் போலீசாருக்கு கல்லூரி மாணவியின் சகோதரர் தெரிவித்தார். அதன்படி வாலிபர் எங்கிருந்து பேசுகிறார் என்பதை செல்போன் டவர் மூலம் போலீசார் கண்காணித்தனர். அப்போது கல்லூரி மாணவி இருக்கும் பகுதியிலிருந்தே அந்த வாலிபர் பேசுவது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்தனர். கல்லூரி மாணவியின் பக்கத்து காம்பவுண்டில் இருந்தே அந்த வாலிபர் பேசியது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த வாலிபர் தூத்துக்குடி மாவட்டம் முக்காணியை சேர்ந்த கண்ணன் (21) என்பது தெரிய வந்தது.
மலுமிச்சம்பட்டியில் பலசரக்கு கடையில் வேலை பார்த்த அவர் வீடுகள் தோறும் சென்று பலசரக்கு பொருட்களை டோர் டெலிவரி செய்வார். அப்படி சென்ற போதுதான் கல்லூரி மாணவியின் செல்போன் எண் கிடைத்துள்ளது. அதை வைத்து தொடர்ந்து பேசி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரிடமிருந்து 15 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
0 comments:
Post a Comment